இது "வெறும் ட்ரைலர் தான், மெயின் பிக்சர் இனிதான்"....! அதிரடி காட்டிய ஸ்டாலின்...!

சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், ஆளுநரின் உரை வெறும் ட்ரைலர் தான் முழு நீளப்படத்தை இனிமேல் தான் பார்ப்பீர்கள் என்று கூறியுள்ளார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் பேசிய உரைக்கு, நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கான விவாதத்திற்கு, தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பதில் கூறியிருப்பதாவது, நீதிக்கட்சி துவங்கி 100 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது திமுக ஆட்சிக்கு வந்தது பெருமையளிக்கிறது. நீதிக்கட்சியின் தொடர்ச்சியாக இருந்தவர் அண்ணா, அண்ணா வழியாக வந்தவர் கருணாநிதி, கருணாநிதியின் தொடர்ச்சி நான் என்றும், அண்ணா அவர்களின் அரசியல் வாரிசாகவும், கருணாநிதியின் அவர்களின் கொள்கை வாரிசாகவும் நான் இருப்பேன் என்றும் கூறினார்.

தமிழகத்தில் ஐந்தாண்டு ஆட்சி செய்யக்கூடிய திமுக அரசின் கொள்கை மற்றும் நலத்திட்டங்களை, ஆளுநர் உரையில் சுருக்கி சொல்ல இயலாது. ஆளுநரின் உரை வெறும் ட்ரைலர் தான், முழு நீளப்படத்தை இனிமேல் தான் அரசு காட்டும் என்று முக.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

திமுக 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை பிடித்துள்ளது, இதனால் கூறிய வாக்குறுதிகளை கட்டாயமாக நிறைவேற்றுவோம், இது குறித்த எந்த சந்தேகமும் வேண்டாம். திமுக ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்து, படிப்படியாக தேர்தல் சமயத்தின் போது கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். மக்கள் பலரும் திமுக-விற்கு வாக்களிக்காதது குறித்து வருத்தம் தெரிவிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

 

More News

அறிவியல் ஆசிரியர் அப்பவே அப்படித்தானாம்.. மறைத்த பள்ளி நிர்வாகம்? வெடிக்கும் சர்ச்சை!

ஆன்லைனில் பாடம் நடத்துகிறேன் என்ற பேர்வழியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த புகாரில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அறிவியல்

விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த மலையாள சூப்பர் ஸ்டார்கள்!

தளபதி விஜய்யின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகமும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டது

ரம்யா பாண்டியனின் வேற லெவல் யோகா போஸ்: ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளின் போட்டியாளர்களின் ஒருவரான நடிகை ரம்யா பாண்டியன் கடந்த சில மாதங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவல் புகைப்படங்களை

விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக சூப்பர் ஸ்டார் மகள் ஆடிய சூப்பர் டான்ஸ்!

தளபதி விஜய் பிறந்தநாள் நேற்று முன் தினம் கொண்

கர்ப்பமுற்ற நிலையில் நீச்சல் குளத்தில் போட்டோஷூட்: கலக்கும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்!

நடிகையும் பாராளுமன்ற உறுப்பினருமான ஒருவர் கர்ப்பமான நேரத்தில் நீச்சல் குளத்தில் போட்டோஷூட் எடுத்துள்ள புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது