close
Choose your channels

கமல்-ரஜினியுடன் கூட்டணி வைக்க திமுக திட்டமா? அமைச்சரின் அதிரடி பேட்டி

Friday, November 22, 2019 • தமிழ் Comments

கடந்த சில நாட்களாக கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளதாகவும் இந்த கூட்டணி திமுக மற்றும் அதிமுக கூட்டணிக்கு சவால் விடுக்கும் வகையில் இருக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்

இந்த நிலையில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுக அமைச்சர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் கமல்-ரஜினி கூட்டணி குறித்து இதுவரை திமுக தரப்பில் இருந்து எந்தவித விமர்சனமும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கமல்ஹாசனை திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இந்த சந்திப்பில் அரசியலும் பேசப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது 

இந்த நிலையில் ரஜினி, கமல் உடன் கூட்டணி அமைக்க திமுக தலைவர் முக ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ரஜினி கமலுடன் திமுக கூட்டணி வைக்குமா? இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 

Get Breaking News Alerts From IndiaGlitz