சிரிப்பதற்கு தடை விதித்த சர்வாதிகார நாடு… காரணம் தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,December 17 2021]

சர்வாதிகாரத்திற்குப் பெயர்போன வடகொரியாவில் உள்ள மக்கள் இன்று முதல் வரும் 10 நாட்களுக்கு யாரும் சிரிக்கக்கூடாது என தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விதிமுறை தற்போது சர்வதேச அளவில் பேசுபொருளாகி இருக்கிறது.

வடகொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜான் இல் கடந்த 2011 டிசம்பர் 17 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது இறப்பை அனுசரிக்கும் விதமாக தற்போதைய அதிபர் கிம் ஜான் உன் நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார். அதில் ஒன்று அடுத்து வரும் 10 நாட்கள் பொதுமக்கள் அனைவரும் துக்கம் அனுசரிக்க வேண்டும். யாரும் சிரிக்கக்கூடாது. பொருட்களை வாங்குவதற்கு கூட வெளியே சென்றுவரக் கூடாது. மேலும் மது, புகைப்பிடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

வடகொரியாவில் இதற்கு முன்பு முன்னாள் அதிபரின் இறப்புக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. ஆனால் சிரிக்கக்கூடாது எனும் புதிய விதிமுறை தற்போது சர்வதேசத் தளத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற துக்க தினத்தை அனுசரிப்பதற்காகவே மக்கள் அடிக்கடி அழுது பழக வேண்டும் என்ற விதியும் இருந்து வருகிறது.

சமீபத்தில் வடகொரியாவில் தென்கொரியா பாப் பாடல் வீடியோக்களை பார்த்த கல்லூரி மாணவர்கள் 7 பேருக்கு அதிபர் கிம் தூக்குத்தண்டனை விதித்ததாக மனித உரிமை அமைப்பு ஒன்று தகவல் வெளியிட்டு இருந்தது. சர்வதேச அளவில் இந்தத் தகவல் கடும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது நாட்டு மக்கள் யாரும் சிரிக்கக்கூடாது எனக் கூறியிருப்பது மேலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News

'பீஸ்ட்' புரமோ வீடியோ: புகைப்படங்கள் வைரல்!

 தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் புரமோ வீடியோவுக்கான படப்பிடிப்பு இன்று நடந்ததாக செய்திகள் வெளியானது. 

22 வருடம் கழித்து மீண்டும் ரிலீஸாகும் நடிகர் விஜய் நடித்த ஹிட் திரைப்படம்!

22 வருடங்களுக்கு முன்பு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான காதல் ஹிட் திரைப்படம் ஒன்று தற்போது மீண்டும் கேரளாவின்

நடிகை ராஷ்மிகாவிற்கு செல்லப்பெயர் வைத்த பிரபல நடிகர்… என்ன தெரியுமா?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ள நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு இந்தியா முழுக்கவே

இந்தியாவில் 100- ஐ தாண்டிய ஒமைக்ரான் பாதிப்பு!

இந்தியாவில் இதுவரை 101 பேருக்கு ஒமைக்ரான் வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக மத்தியச் சுகாதாரத்துறை

முதலமைச்சரிடம் ஆசி பெற்ற சந்தானம்: கோரிக்கையை ஏற்று உறுதிமொழி அளித்ததாக தகவல்!

நடிகர் சந்தானம் சமீபத்தில் புதுவை முதல் அமைச்சரை சந்தித்து ஆசி பெற்ற நிலையில் அவருக்கு உறுதிமொழியை முதலமைச்சர் ரங்கசாமி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.