16 வயதுக்கு மேல் விருப்பத்துடன் உறவு கொண்டால் நடவடிக்கை வேண்டாம்: உயர்நீதிமன்றம் ஆலோசனை

16 வயதுக்கு மேல் உள்ள ஆண், பெண் விருப்பத்துடன் பாலுறவு கொண்டால் அவர்கள் மீது போக்சோ சட்ட நடவடிக்கை எடுப்பதில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்ததாக நாமக்கல் இளைஞர் மீது பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கில் அவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையை நாமக்கல் நீதிமன்றம் வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த அந்த இளைஞர், தன்னை திருமணம் செய்த பெண்ணே தான் கடத்தப்படவில்லை என்று கூறியதை நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் தீர்ப்பு அளித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்ற நீதிபதி, அந்த இளைஞரை விடுதலை செய்ததோடு, 16 வயதுக்கு மேல் ஆணும், பெண்ணும் விருப்பத்துடன் பாலுறவு கொண்டால் அவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் இதுகுறித்து சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கினார்.
 

More News

கார்த்தி-ஜோதிகா படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்

நடிகர் கார்த்தியும் நடிகை ஜோதிகாவும் முதல்முறையாக இணைந்து நடிக்கும் படத்தை 'பாபநாசம்' பட இயக்குனர் ஜித்துஜோசப் இயக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

பேய்க்கு பதில் பாம்பு: ராகவா லாரன்ஸின் புதிய திட்டம்

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய 'காஞ்சனா 3' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை செய்து வருகிறது. இருப்பினும் 'காஞ்சனா, காஞ்சனா 2 படங்கள் போலவே

அடுத்த பிறவியில் ஐபிஎஸ் அதிகாரி: பிரபல நடிகையின் ஆசை

அடுத்த பிறவியில் தான் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக மாற ஆசை என பிரபல தமிழ் நடிகை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

கடனை வசூலிக்க மனைவியை காதலியாக நடிக்க வைத்தவர் கைது!

கொடுத்த கடனை வசூல் செய்ய மனைவியை கடன் கொடுத்தவருடன் காதலி போல் பழகவிட்டு கடன்காரரை கடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி என தகவல்

இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்கிய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.