நாம் தமிழரின் வாக்குகள் பிற கட்சிகளின் வெற்றி தோல்வியை  தீர்மானிக்கிறதா... ஓர் அலசல்...!

  • IndiaGlitz, [Tuesday,May 04 2021]

பெரும்பாலும் இளைஞர்கள், அரசியல் கட்சியினரிடத்தில் பணம் வாங்காதவர்கள், சாதி மதம் பார்க்காதவர்களின் ஓட்டுக்கள் நாம் தமிழருக்கே என்ற கருத்துக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது. நாம் தமிழரின் மொழி கையாடல், கொள்கை, கோட்பாடுகளை பெரும்பாலும் வரவேற்ற இளைஞர்கள், விவசாய சின்னத்திற்கே வாக்களித்துள்ளார்கள்.

ஆனால் இக்கட்சிக்கு கட்டமைப்பு என்பது கட்டாய தேவை, அப்போது தான் அடுத்த தேர்தலில் வெற்றிபெற இயலும் என தொடர்ந்து அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட நாம் தமிழர் வெற்றிபெறவில்லை என்றாலும், சுமார் 170-க்கும் அதிகமான தொகுதிகளில் அதிமுக, திமுக கட்சிக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் தலைநிமிர்ந்து வருகிறது இக்கட்சி. இதற்கு சமூக வலைத்தளங்களும் ஒரு முக்கிய காரணமே, பெரும்பாலான இளைஞர்கள் சீமானின் கொள்கைகளை பின்பற்றி இம்முறை மாற்றாக அவருக்கு வாக்களித்துள்ளார்கள்.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுவது போல திராவிடக்கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் உருவெடுத்துள்ளது. இக்கட்சியின் சிறப்பு என்னவெனில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது தான். அதிலும் குறிப்பாக 117 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களையும், 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களையும் களமிறக்கியதுதான். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்ட நாம் தமிழர் 1.1% வாக்குகளை பெற்றது. 2019 மக்களவை தேர்தலிலும் அனைத்து தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் 3.9% வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்தது.

தற்போது நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 7% வாக்குகளை பெற்றும் தோல்வியை தழுவினாலும் ஒரு சில சாதனைகளை புரிந்துள்ளது என்றே சொல்லலாம். இதற்கு காரணம் பல தொகுதிகளில் நாம் தமிழர் வாக்குகளை பிரித்ததால், மூத்த கட்சிகள் தோல்வியை சந்த்தித்துள்ளன.

இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் இடும்பாவனம் கார்த்திக் கூறியிருப்பதாவது,
கட்சி முடிவுகளில் திருப்தி இல்லையெனிலும், 30 லட்சம் வாக்குகளையும் 7% வாக்கு விகிதத்தையும் பெற்றது மாற்றத்திற்கான விதையாக நினைக்கிறோம் என அவர் கூறியுள்ளார்.

2021 சட்டமன்ற தேர்தலில், நாம் தமிழர் வேட்பாளர்கள் அதிகம் வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்த குறிப்பிட்ட தொகுதிகள்,
• கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் களமிறங்கிய திருவொற்றியூர் தொகுதியில் 48,597 (24.3%) வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பெற்றார்.
• தூத்துக்குடியில் இருக்கும் 6 தொகுதிகளில் நாம் தமிழர் 5 தொகுதிகளில், 3 ஆம் இடத்தை பிடித்துள்ளது.


• தூத்துக்குடி தொகுதியில் களமிறங்கிய நாம் தமிழர் வேட்பாளர் வேல்ராஜ் 30,937 வாக்குகளையும், 16.42% வாக்கு வீதத்தையும் பெற்றுள்ளார். சீமானுக்கு அடுத்தபடியாக இவர்தான் கட்சியில் அதிகம் வாக்குகளை பெற்றுள்ளார்.

• ஆவடி ,கோ.விஜயலட்சுமி (30,087 - 10.00% )

• பூந்தமல்லி, வி. மணிமேகலை (29,871 -11.33%)

• சோழிங்கநல்லூர்,மைக்கில் வின்சென்ட் சேவியர் (38,872 - 10.01%)

• மாதவரம், ஏழுமலை (27,453 - 9.07%)

• செங்கல்பட்டு, கே.சஞ்சீவிநாதன் (26,868- 9.8%)

• திருவாரூர், வினோதினி.ஆர் (26,300 - 12.63%)

• காரைக்குடி ,என்.துரைமாணிக்கம் (23,872 - 11.24%)

• மானாமதுரை, எம்.சண்முகப்பிரியா (23,228 -11.44%)

• திருப்பூர் வடக்கு, எஸ்.ஈஸ்வரன் -( 23,110 - 9.71%)

• திருப்பரங்குன்றம், ஆர்.ரேவதி (22,722 - 9.63%)

• அம்பத்தூர், அன்பு தென்னரசன் (22,701- 9.45%)