close
Choose your channels

டீ குடித்தால் கொரோனா போகுமா??? தொடரும் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி!!!

Monday, March 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டீ குடித்தால் கொரோனா போகுமா??? தொடரும் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி!!!

 

கொரோனா பரவத்தொடங்கியதில் இருந்து அதற்கான மருந்து பொருட்களைப் பற்றிய வதந்திகளும் அதிகமாகி கொண்டே வருகின்றன. கொரோனா சிகிச்சைக்கான மருந்துப் பட்டியலில் hydroxychloroquine, azithromycin மருந்துகளைப் பார்த்த மக்கள் அதையும் விட்டு வைக்காமல் வாங்கி குவத்ததன் விளைவு தற்போது இந்த மருந்து பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது. அந்த அளவிற்கு கொரோனா பற்றிய அச்சமும் மக்களை பீடித்திருக்கிறது.

சமூக ஊடகங்களில், நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரித்துக் கொள்வதைப் பற்றி சில பாரம்பரிய மருத்துவர்கள் நல்ல தகவல்களைப் பகிர்ந்து கொண்டும் வருகின்றனர். ஆனாலும் அறிவியலுக்கு புறம்பான, உறுதிப்படுத்த முடியாத பல தகவல்கள் சமூக ஊடகங்களில் குவிந்து, மக்களை கடும் குழப்பத்திற்கு ஆளாக்கி வருகின்றன.

கொரோனா வைரஸ் பரவலை உலகிற்கு முதன் முதலில் எடுத்துக்கூறியவர் கண் மருத்துவரான லீ வென்லியாங். முதலில் மருத்துவர் லீ கூறிய கருத்துக்களை ஏற்க மறுத்த சீன அரசாங்கம் அவருக்கு சிறை தண்டனையும் வழங்கியது. பின்பு சீன அரசு தனது தவறுக்காக மன்னிப்பும் கோரியது. இந்த சம்பவங்களைத் தொடர்ந்து மருத்துவர் லீ கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகி இறந்தும்போனார். அவரது உயிரிழப்புக்குக் கடும் வருத்தத்தைத் தெரிவித்த மக்கள் அவரை கடவுளாகவே நினைக்கத் தொடங்கிவிட்டனர்.

சீன அரசாங்கம் லீ கூறிய கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மறுத்தவுடன், அவரே ஆராய்ச்சியில் ஈடுபட்டதாகவும் அந்த ஆராய்ச்சியில் சில பொருட்கள் கொரோனா வைரஸை தடுக்க உதவும் என்பதை அவர் கண்டுபிடித்ததாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவத்தொடங்கின. அதில் மெத்தில்சாந்த்தைன் (Methylxanthines), Theobromine, Theophylline போன்ற வேதிப்பொருள் கொரோனா வைரஸை மட்டுப்படுத்தும் தன்மைக்கொண்டது என மருத்துவர் குறிப்பிட்டதாக சீனா முதற்கொண்டு பல நாட்டு சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின.

இது முற்றிலும் உறுதிப்படுத்தாத தகவல் என்பதும் குறிப்பிடத்தக்கது. மெத்தில்சாந்த்தைன் என்பது டீ, சாக்லேட், காபி போன்ற பொருட்களில் அதிகம் காணப்படுகிறது. மருத்துவர் லீ கூறியதாக வந்த வதந்திகளை நம்பிய சிலர், சீன மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளுக்கு 2 வேளை தேநீர் கொடுக்கப்பட்டு வருகிறது என்பது போன்ற வதந்திகளையும் பரப்பத் தொடங்கினர். இதையடுத்து கடந்த பிப்ரவரியில் CNN செய்தி ஊடகம் கொரோனா நோயாளிகளுக்கு டீ, காபி போன்ற எந்த பொருளும் கொடுக்கப்படுவது இல்லை. இது தவறான தகவல் என்றும் தெளிவுபடுத்தி இருந்தது.

தேநீர், காபி போன்ற பொருட்கள் ஜலதோஷத்தை எதிர்த்துப்போராட உதவும் என்ற முடிவுகளையே இன்னும் மருத்துவ உலகம் நிரூபிக்கவில்லை. டீ போன்ற சூடான பொருட்கள் சளி, இருமல் போன்ற பாதிப்புகள் உள்ள நேரங்களில் தொண்டைக்கு இதமான திரவப்பொருட்களாக பரிந்துரைக்கப்படுகின்றன. CoVid-19 வைரஸ் கடுமையான சுவாசக்கோளாறு, சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தவல்லது. சளி தொந்தரவுகளால் அவதிப்படும்போது மூச்சுக்குழாயை சரிசெய்ய சில நேரங்களில் Theobromine பயன்படலாம். அது கடுங்காப்பி போன்ற பொருட்களில் இருக்கிறது எனத் தற்போது மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், Theobromine கடும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இருமலைக் குறைக்க Theophylline உதவுகிறது. ஆனால் கொரோனா நோய்த்தொற்றினை இந்தப்பொருட்களால் குறைக்க முடியாது என்பதே நிதர்சனம். கொரோனாவிற்கான தடுப்பு மருந்து இதுவரை சந்தைக்கு வராத நிலையில் இதுபோன்ற வதந்திகளைப் பரப்பி மக்களை குழப்ப வேண்டாம் எனவும் பல நாட்டு அரசாங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன. வதந்திகளை நம்பாமல் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதே கொரோனாவில் இருந்து தப்பிக்க ஒரே வழி என்பதை மக்கள் மறந்துவிட கூடாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.