பெண்கள் எப்படி இருக்கனும் தெரியுமா? “தளபதி 65“ பட நாயகியின் அசத்தல் விளக்கம்!

  • IndiaGlitz, [Saturday,June 05 2021]

கொரோனாவிற்கு இடையில் சினிமா பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் கொரோனா பாதுகாப்பு குறித்தும் இந்நேரத்தில் பொதுமக்களுக்கு இருக்க வேண்டிய மன உறுதி பற்றியும் அக்கறையோடு சோஷியல் மீடியாவில் விளக்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது “தளபதி 65“ படத்தின் நாயகி பூஜா ஹெக்டே அவர்கள் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார்.

அதில் “வலிமையான பெண்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள். நாங்கள் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். எங்கள் அழுகையைப் பற்றியும் மோசமான நாட்களைப் பற்றியும் கவலைப் படுகிறோம். ஆனால் அதிலிருந்து எப்போதும் வெளிவந்து விடுகிறோம்” என கூறியிருக்கிறார். இந்த விளக்கம் கொரோனா நேரத்தில் உடைந்து போய் இருக்கும் பலருக்கும் புத்துணர்வை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நடிகை பூஜா ஹெக்டே இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான “முகமூடி” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கில் வெளியான “ஒக்க லைலா கோசம்” படத்தில் நடித்து தெலுங்கு சினிமாவில் முன்னணி இடத்தைப் பெற்றார். அதோடு ஹிந்தி சினிமாவிலும் தற்போது முன்னணி இடத்தை தக்கவைத்துள்ள அவர் தளபதி விஜய் நடிக்கும் “தளபதி 65” படத்தின் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே சோஷியல் மிடியாவில் வெளியிட்டு உள்ள வலிமையான பெண்கள் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. முன்னதாக கொரோனாவிற்கு எதிராக எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் அவர் விளக்கம் அளித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.