close
Choose your channels

'தலைவர் 169' படத்தில் இணையும் 'டாக்டர்', 'பீஸ்ட்' நடிகர்!

Saturday, February 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படமான ’தலைவர் 169’ திரைப்படத்தில் நெல்சன் இயக்கிய ’டாக்டர் மற்றும் 'பீஸ்ட்’ படங்களில் நடித்த நடிகர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த’ திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியான நிலையில் அவருடைய அடுத்த படமான ‘தலைவர் 169’ படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளார் என்பது உறுதிசெய்யப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் நெல்சன் இயக்கிய முந்தைய படங்களான ’கோலமாவு கோகிலா’ ’டாக்டர் மற்றும் 'பிஸ்ட்’ படங்களில் நடித்த ரெடின் கிங்ஸ்லே ’தலைவர் 169’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ரெடின்கிங்ஸ்லே ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்திலும் நடித்திருந்தார் என்பதும் தெரிந்ததே.

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகராக இருக்கும் ரெடின் கிங்ஸ்லே குறுகிய காலத்தில் சிவகார்த்திகேயன், விஜய் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் படங்களில் அடுத்தடுத்து நடிக்க வாய்ப்பு பெற்றிருப்பது பெரும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.