ஓடிடி ரிலீஸிலும் சிக்கல்: சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி பட தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி!

  • IndiaGlitz, [Saturday,May 08 2021]

கொரோனா வைரஸ் முதல் அலையின்போது திரை அரங்குகள் மூடப்பட்டு இருந்ததால் பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகின என்பதும் அவற்றில் சூர்யாவின் சூரரைப்போற்று, விஜய்சேதுபதியின் ‘க/பெ ரணசிங்கம்’ படங்களும் உண்டு என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது அலை காரணமாக மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதும் எப்போது மீண்டும் திரையரங்குகள் திறக்கப்படும் என்று தெரியவில்லை என்பதால் மீண்டும் ஓடிடியில் நோக்கி தயாரிப்பாளர்கள் சென்று கொண்டிருக்கின்றனர்

அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ மற்றும் விஜய்சேதுபதியின் ’துக்ளக் தர்பார்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஓடிடி உரிமையோடு சாட்டிலைட் உரிமையையும் சேர்த்து ஹாட்ஸ்டார் டீல் பேசி உள்ளதாக தெரிகிறது

ஆனால் ஏற்கனவே இந்த இரண்டு படங்களும் தயாரிப்பில் இருக்கும் போதே சன் டிவிக்கு சாட்டிலைட் உரிமை விற்கப்பட்டு விட்டதால் தற்போது இந்த திரைப்படங்கள் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனவும் சன் டிவி சாட்டிலைட் உரிமையை திருப்பி கொடுக்க மறுத்து விட்டதால் இந்த இரு படங்களின் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

பாவாடை தாவணியில் 'நம்ம ஊரு பொண்ணு': ஷாலு ஷம்முவின் லேட்டஸ் போட்டோஷூட்!

சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' 'மிஸ்டர் லோக்கல்' உள்பட ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் கவர்ச்சி நடிகை ஷாலு ஷம்மு என்பது தெரிந்ததே.

இருளுக்கு முடிவுண்டு, எங்களுக்கு விடிவுண்டு: உதயநிதிக்கு வாழ்த்து கூறிய பிரபல நடிகர்!

சமீபத்தில் நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியை பிடித்துள்ளது என்பதும், அக்கட்சியின் தலைவர்

தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகர் விஷால்…கூடவே விடுத்த கோரிக்கைகள்?

முதல் முறையாக தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கும் மு.க.ஸ்டாலின்

கொரோனா நிவாரண நிதி ரூ,2,000 எப்போது கிடைக்கும்? அமைச்சர் தகவல்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்றால் ஒவ்வொரு குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்கப்படும்

பொறுத்தார் பூமி ஆள்வார்: முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பிய கே.பாக்யராஜ்

தமிழக முதல்வராக நேற்று பொறுப்பேற்ற முக ஸ்டாலின் அவர்களுக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்துக்களை நேரிலும், சமூக வலைத்தளங்களிலும், தொலைபேசியிலும் தெரிவித்தனர்