மணிகண்டன், நடிகை சாந்தினி சம்பவம்....! வாக்குமூலம் அளித்த மருத்துவர்....!

  • IndiaGlitz, [Wednesday,June 30 2021]

மாஜி அமைச்சர் மணிகண்டன், நடிகை சாந்தினியை பிரபல தனியார்ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றது குறித்த ஆதாரங்கள், தற்போது காவல்துறையினர் கையில் சிக்கியுள்ளது.

மணிகண்டன் கூறியதற்கு இணங்க, நடிகைக்கு கட்டாயக் கருக்கலைப்பு செய்ததாக கோபாலபுரம் மருத்துவர், அடையாறு காவல்துறையினரிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.தான் சிகிச்சையளித்த போது, நடிகைக்கு முகத்தில் காயங்கள் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

தென்மாவட்டத்தில் இருக்கும் பிரபலமான ஹோட்டலுக்கு மணிகண்டன், சாந்தினியை அழைத்து சென்று தங்கியுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் ஹோட்டலுக்கு சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். மணிகண்டனின் சாதாரண போன்கள் மட்டுமே கிடைத்துள்ளது, ஸ்மார்ட் போன்கள் காவல் துறையினருக்கு கிடைக்காத பட்சத்தில், போலீஸ் காவலில் அவரை எடுக்க திட்டமிட்டனர். ஆனால் அதுவும் கிடைக்காததால், செல்போனை பறிமுதல் செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.