இளம்பெண்ணின் தொண்டையில் 1.5 இன்ச் நீள புழு: பச்சையாக மீன் சாப்பிட்டதால் ஏற்பட்ட விபரீதம்

  • IndiaGlitz, [Monday,July 13 2020]

25 வயது இளம்பெண் ஒருவர் பச்சையாக மீன் சாப்பிட்டதால் அவரது தொண்டையில் ஒன்றரை இன்ச் நீளத்துக்கு புழு ஒன்று இருந்தது கண்டு பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 25 வயது பெண் ஒருவர் கடந்த சில நாட்களாக தொண்டையில் வலி இருந்துள்ளதை உணர்ந்துள்ளார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சென்று பரிசோதனை செய்தார். அப்போது அவரது தொண்டையில் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது உள்ளே ஒரு புழு உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அவருக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் அந்த புழுவை வெளியே எடுத்தனர். பின்னர் அவரிடம் மருத்துவர்கள் விசாரித்தபோது அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பச்சையாக sashimi என்ற மீனை சாப்பிட்டதாகவும் அதன் பின்னரே இந்த வலி தனக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மீனின் உள்ளே இருந்த புழு அவரது தொண்டையில் சிக்கி இருக்கலாம் என்றும் அதனால் அவருக்கு வலி ஏற்பட்டு இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறினர். இது மிக அரிதாகவே நடக்கும் நிகழ்வு என்றும் இருந்தாலும் பச்சையாக மீன் சாப்பிடுவதை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

More News

கொரோனா பார்ட்டியில் பங்கேற்ற இளைஞர் பரிதாப பலி!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி மனித இனத்தையே அச்சுறுத்தி வந்தாலும் இன்னும் ஒரு சிலர் கொரோனா வைரஸ் என்பதே வதந்தி என்றும் கொரோனா வைரஸ்

நான், மரணப்படுக்கையில் இருக்கிறேன்! இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் நடிகையின் பதிவு

பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர் மரணம் அடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நான் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது

நான் உன்னில் இருப்பேன், நீ என்னில் இருப்பாய்: வைரமுத்துவுக்கு வாழ்த்து கூறிய பாரதிராஜா

கவிப்பேரரசு வைரமுத்துவின் 66வது பிறந்த நாளை கோலிவுட் திரையுலகமே கொண்டாடி வரும் நிலையில் இயக்குனர் இமயம் பாரதிராஜா தனது சொந்த ஊரில் இருந்து வெளியிட்டிருக்கும்

பட்டப்படிப்பு முடித்த கையோட பாஸ்போட்டையும் தரோம்… மகிழ்ச்சி அறிவிப்பு வெளியிட்ட மாநில முதல்வர்!!!

ஹரியாணா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் விதத்தில் பெண்கள் பட்டப்படிப்பை முடிக்கும் போது அவர்களுக்கு பாஸ்போட்டையும் சேர்த்து வழங்க ஏற்பாடு

சீனாவுக்கு இதெல்லாம் முன்னாடியே தெரியும்… திடுக்கிடும் அறிவிப்பை வெளியிட்ட பெண் விஞ்ஞானி!!!

ஹாங்காங் வைரலாஜி துறையில் பணியாற்றும் நோய் எதிர்ப்பு மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் லி மெ யான் தற்போது உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்.