ஜோபிடனுக்கு அடுத்தடுத்து செக் வைக்கும் டிரம்ப்… புதிய நிபந்தனையால் நீடிக்கும் சிக்கல்!!!

 

அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்பதற்கான முடிவு தெரிந்து விட்டதாக நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு வியாழக்கிழமை அன்று செய்தியாளர்களை சந்தித்த டொனால்ட் ட்ரம்ப் தேவையான எலக்டோரல் காலேஜ் வாக்குகளை ஜோ பிடன் பெற்றிருக்கிறாரா? அதுதான் அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்பதற்கான முடிவை தீர்மானம் செய்யும் எனக் கூறி மேலும் பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

செய்தியாளர் சந்திப்பின்போது டிரம்ப்பை பார்த்து, வெள்ளை மாளிகையை விட்டு நீங்கள் வெளியேறப் போகிறீர்களா எனக் கேள்வி எழுப்பிய நிரூபருக்கு, “நிச்சயமாக நான் வெளியேறுவேன். அது உங்களுக்குத் தெரியும். ஆனால் அதற்கு எலக்டோரல் காலேஜ் வாக்குகளை ஜோ பைடன் பெற்றிருக்க வேண்டும்” எனக் கூறி இருக்கிறார். இதனால் ட்ரம்ப்பின் பதிலில் மேலும் பல புதிர்கள் ஒளிந்து இருப்பதாகக் கருதப்படுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒருவர் எத்தனை எலக்டோரல் காலேஜ் வாக்குகளைக் கைப்பற்றுகிறார் என்பதைப் பொறுத்தே அதிபராகும் தகுதியைப் பெறமுடியும். 538 எலக்டோரல் காலேஜ் வாக்குகள் கொண்ட அமெரிக்காவில் ஒருவர் 270 வாக்குகளை பெற்றால் மட்டுமே பெரும்பான்மை வாக்குகளை பெற்றதாகக் கருத முடியும். ஆனால் டிரம்ப்புக்கு 232 வாக்குகள் மட்டுமே கிடைத்து இருக்கிறது. இந்நிலையில் பெரும்பான்மைக்கும் அதிகமாக ஜோ பிடன் 306 எலக்டோரல் காலேஜ் வாக்குகளை வென்றுள்ளார்.

மேலும் பாப்புலர் வாக்கு எண்ணிக்கையில் டிரம்பை விட 6 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஜோ பிடன் முன்னிலையில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் ஜோ பிடனின் வெற்றியை சந்தேகிக்கும் வகையிலான கருத்துக்களையே டிரம்ப் தொடர்ந்து வெளியிட்டு வருவதும் கடும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. அதோடு “தேர்தலில் பெரிய அளவில் மோசடி நடந்திருப்பதை நாங்கள் அறிவோம்” எனவும் டிரம்ப் கூறி வருகிறார்.

இதையடுத்து வரும் டிசம்பர் 14 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலை இறுதிச் செய்யும் கடைசி கூட்டம் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக செனட் சபையில் எந்தக் கட்சி அறுதிப் பெரும்பான்மை வகிக்கும் என்பதை முடிவு செய்யும் இன்னொரு தேர்தல் பாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தத் தேர்தலில் நிற்கும் வாக்காளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய டிரம்ப் வரும் 5 ஆம் தேதி ஜார்ஜியாவிற்கு செல்வதாகவும் கூறப்படுகிறது.

ஒருவேளை செனட் சபையில் குடியரசு கட்சியனர் அறுதிப் பெரும்பான்மை பெற்றால் டிரம்ப்பின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. ஆனால் முடிவு எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியாத சூழல் நிலவுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறுபவர் இவரா? அர்ச்சனா குரூப் அதிர்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக அர்ச்சனா வரும் வரை எந்தவித குரூப்பும் இல்லாமல் இருந்த நிலையில், அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் தனக்கென ஒரு குரூப்பை வளர்த்து கொண்டார்.

டீக்கடையில் வாங்கிய வடையில் முழு பிளேடு: அதிர்ச்சியில் சப் இன்ஸ்பெக்டர்!

நிலக்கோட்டை அருகே டீக்கடை ஒன்றில் வாங்கிய வடையில் முழு பிளேடு இருந்ததை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அதிர்ச்சி அடைந்த சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது 

விஜய்சேதுபதி நடிக்க வேண்டிய படத்தில் விக்ரம் நடிக்கின்றாரா?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது ஒரே நேரத்தில் சுமார் ஒரு டஜன் படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் பாதி படங்களின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன

மாலத்தீவில் மாஸ் போஸ்: சமந்தாவின் உச்சகட்ட கவர்ச்சி!

திருமணத்திற்கு பின்னரும் தமிழ் திரையுலகில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரே நடிகை சமந்தா தான் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட் திரைப்படம்! 5 நிமிட வீடியோ வைரல்!

ஹாலிவுட்டில் புரூஸ்லி நடித்த படங்கள் உள்பட பல திரைப்படங்கள் மார்ஷியல் ஆர்ட்ஸ் குறித்து வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.