கார், டிவி, பிரிட்ஜ் எதுவும் வாங்காதீங்க…. அமேசான் நிறுவனரே கூறிய புதிய அறிவுரை!

  • IndiaGlitz, [Monday,November 21 2022]

உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனத்தின் தலைவரான ஜெப் பெசோஸ் கார், டிவி, பிரிட்ஜ், டிவி என எந்த அத்யாவசியப் பொருள் வாங்குவதாக இருந்தாலும் யோசித்து வாங்குங்கள் என அறிவுரை கூறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா நோய்த்தொற்று மற்றும் தற்போது நடந்துவரும் ரஷ்யா – உக்ரைன் போர் போன்ற காரணங்களால் உலகம் முழுக்கவே கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு இருப்பதாகப் பொருளாதார அறிஞர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பணவீக்க விகிதம் கடும் உயர்வு ஏற்பட்டு மந்தநிலை உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சூழல் காரணமாக அமேசான் நிறுவனத்தின் தலைவரான ஜெப் பெசோஸ் சமீபத்தில் தான் அளித்த பேட்டியொன்றில் “அமெரிக்காவில் பண்டிகை விடுமுறை காலம் வரும் நிலையில் மக்கள் புதிய கார்கள், டிவிக்கள், பிரிட்ஜ் போன்ற பொருட்களை வாங்க வேண்டாம் என்றும் அமெரிக்க பொருளாதார மந்தநிலையை நோக்கிச் செல்கிறது என்றும் கூறியுள்ளார்.

மேலும் இதனால் எப்போது வேண்டுமானாலும் பிரச்சனை தலைதூக்கலாம் என எச்சரித்த அவர் பணத்தை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் பெரிய டிவி ஒன்றை வாங்க வேண்டும் என நினைத்தால் அதை ஒத்திப்போடுங்கள், நிலமை எப்படி இருக்கிறது எனக் கவனித்து பார்த்து பின்னர் முடிவெடுங்கள். வாகனம், பிரிட்ஜ் மற்ற எந்த பொருளாக இருந்தாலும் இதையே பின்பற்றுங்கள் என்றும் கூறியுள்ளார். உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் கூறியிருக்கும் இந்த அறிவுரை பலரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது. மேலும் இந்தியாவிலும் இதுபோன்ற பண வீக்க நிலைமை ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறதா? என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியருக்கிறது.

More News

பெண் குழந்தையை தத்தெடுத்த நடிகை ரோஜா.. இன்று அவர் என்ன செய்கிறார் தெரியுமா?

 நடிகை ரோஜா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிறுமியை தத்தெடுத்த நிலையில் இன்று அந்த சிறுமி மருத்துவம் படிப்பதற்காக கல்லூரியில் சேர்ந்து உள்ளார்.

ராபர்ட் உடன் காதலை முறித்து கொண்டாரா நிஜ காதலி?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான ராபர்ட் மாஸ்டர், பிக்பாஸ் வீட்டிற்குள் ரக்சிதாவை சுற்றி சுற்றி வந்து ஒருதலையாக காதலித்து வரும் நிலையில் அவரது நிஜ காதலி அவருடனான

புற்று நோயில் இருந்து மீண்ட பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

இரண்டு முறை புற்று நோயிலிருந்து மீண்ட பிரபல நடிகை ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மாரி செல்வராஜின் 'வாழை': படப்பிடிப்பை தொடங்கி வைத்த உதயநிதி எம்.எல்.ஏ

Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar மற்றும் Navvi Studios வழங்கும், “வாழை” திரைப்படம் இன்று இனிதே துவங்கியது.

மாரி செல்வராஜின் அடுத்த படம் இதுதான்: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருடன் அதிகாரபூர்வ அறிவிப்பு

 பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர்