பெண்களுக்கு எதிரான அவமதிப்பு எதிர்க் கட்சியிலும் இருக்கக் கூடாது… நடிகை குஷ்பு கருத்து!

  • IndiaGlitz, [Wednesday,January 27 2021]

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப அணித் தலைவர் நிர்மல் குமார் விமர்சனம் செய்து இருந்தார். அந்த விமர்சனம் சோனியாவை அவமதிப்பாக இருக்கிறது என்றும் அதைத் திரும்ப பெற வேண்டும் என்றும் பாஜகவை சேர்ந்த குஷ்புவே கூறி இருப்பதும் அரசியல் களத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னதாக நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் பங்கு வகித்தப் பின்பே அதில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில் பாஜகவில் இருந்து கொண்டே பாஜகவை சேர்ந்த நிர்மல் குமாரின் கருத்தைத் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். காங்கிரஸ் எம்பியும் சோனியாவின் மகனுமான ராகுல் காந்தி முன்னதாக தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டார். தற்போது 3 நாள் சுற்றுப் பயணமாக கொங்கு மண்டலப் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், “நாக்பூரில் இருக்கும் டவுசர்வாலாக்கள் தமிழகத்தில் காலூன்ற முடியாது, தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது” என்று ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை மறைமுகமாகச் சாடினார்.

இந்தக் கருத்துக்கு பதிலடி கொடுத்த தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப அணித் தலைவர் நிர்மல் குமார், “இத்தாலியைச் சேர்ந்த பார் டான்சர், சோனியா இந்தியாவின் தலை எழுத்தை முடிவு செய்ய முயற்சி செய்யும்போது எங்களுக்கு தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை உள்ளது” என்று தெரிவித்தார். அதோடு சோனியா காந்தி, ராகுலுக்கு எதிரான சில சர்ச்சைக்குரிய விமர்சனங்களையும் அவர் வெளியிட்டு இருந்தார்.

இந்த விமர்சனம் பெண்களை அவமதிக்கும் வகையில் இருக்கிறது என்றும் அதைத் திரும்பபெற வேண்டும் என்று நடிகை குஷ்பு வலியுறுத்தி இருக்கிறார். ஆனால் நடிகை குஷ்புவின் கோரிக்கைக்கு பதில் அளித்த நிர்மல் குமார் போன்ற மற்ற பாஜக பிரமுகர்கள் அதில் ஒரு தவறும் இல்லை. அவர் இத்தாலியில் என்ன செய்து கொண்டு இருந்தாரோ அதைத்தான் கூறி இருக்கிறோம் எனப் பதில் அளித்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நிர்மல் குமார் தெரிவித்த கருத்துக்கு பலரும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

More News

மாற்றத்தின் பயணம் விரைவில்: ரஜினிகாந்த் குறித்து அர்ஜூனாமூர்த்தி அறிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவிருப்பதாக கூறியபோது அர்ஜூனாமூர்த்தி என்பவரை தனது கட்சியின் முக்கிய நிர்வாகியாக நியமனம் செய்தார்

தண்ணீர் பக்கெட்டில் கவிழ்ந்த 2 வயது குழந்தை… பரிதாபச் சம்பவம்!

சங்கரன்கோவில் பகுதியில் விளையாடி கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை ஒன்று தவறுதலாக தண்ணீர் பக்கெட்டில் கவிழ்ந்து உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இது பாலியல்வாதிகளின் உலகம்: இளம் பாடகர் குறித்து சின்மயி சர்ச்சை கருத்து!

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த நிகழ்ச்சியின் வீடியோ ஒன்றை தனது டுவிட்டரில் பதிவு செய்த பாடகி சின்மயி, 'இது பாலியல்வாதிகளின் உலகம் என்றும்,

இளைஞருக்கு முத்தம் கொடுக்க முயற்சிக்கும் பிக்பாஸ் ஜூலி: வைரல் வீடியோ

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ஜூலி அந்த நிகழ்ச்சியின் மூலம் கடும் விமர்சனங்களை பெற்றார். ஏற்கனவே ஜல்லிக்கட்டு மூலம் புகழ்பெற்றிருந்த ஜூலிக்கு

முடிந்தது 4 ஆண்டுகால சிறைவாசம்… சசிகலா விடுதலை!

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று கொரோனா தொற்று காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சசிகலா இன்று விடுதலை செய்யப்பட்டார்.