close
Choose your channels

ஆபரேஷன் சிந்தூர் குறித்து தெரு நாய்கள் குரைப்பது போல் குரைக்க வேண்டாம்: பிரபல நடிகர் எச்சரிக்கை..!

Wednesday, May 7, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எல்லைகளை பாதுகாப்பது குறித்து ஏ, பி, சி, டி கூட தெரியாமல், ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து தெரு நாய்கள் குரைப்பது போல் சமூக ஊடகங்களில் பேச வேண்டாம் என பிரபல நடிகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நடிகர் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ராணுவம் இன்று அதிகாலை பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை தாக்கியதை தொடர்ந்து, இதைப் பற்றி சில பிரபலங்கள் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளை செய்து வருகிறார்கள்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பவன் கல்யாண், "தேசிய பாதுகாப்பை குறைத்து மதிப்பிடும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை பிரபலங்கள் தவிர்க்க வேண்டும். சமூக வலைதளங்களில் பதிவு செய்யும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேசத்துக்கு எதிரான கருத்துக்களை பகிர வேண்டாம்" என கூறினார்.

மேலும், "எல்லைகளை பாதுகாப்பது குறித்து ஏ, பி, சி, டி கூட தெரியாமல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து தெரு நாய்கள் குரைப்பது போல் சமூக ஊடகங்களில் பேச வேண்டாம். பிரபலங்கள் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு தகவல்களை சரிபார்க்க வேண்டும். கவனக்குறைவாக தவறான தகவல்களை பரப்பி, தேசிய ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டாம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவரது இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment