டோரா-கவண் 2வது வார வசூல் நிலவரம்

  • IndiaGlitz, [Monday,April 10 2017]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான திகில் படமான 'டோரா' மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய 'கவண்' ஆகிய படங்கள் இரண்டாவது வாரத்திலும் திருப்தியான வசூலை தந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சென்னையில் கவண் திரைப்படம் இரண்டாவது வார இறுதியில் 18 திரையரங்குகளில் 216 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.72,23,940 வசூல் செய்துள்ளது. மேலும் இந்த படம் மார்ச் 31ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 9ஆம் தேதி வரை சென்னையில் 2,79,66,220 வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இரண்டாவது வாரத்திலும் திரையரங்குகளில் 90% பார்வையாளர்கள் இருந்ததே இந்த படத்தின் வெற்றிக்கு சான்றாக உள்ளது.

அதேபோல் நயன்தாராவின் 'டோரா' திரைப்படம் இரண்டாவது வார இறுதியில் சென்னையில் 13 திரையரங்க வளாகங்களில் 103 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.20,37,660 வசூல் செய்துள்ளது. மேலும் இந்த படம் மார்ச் 31ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 9ஆம் தேதி வரை சென்னையில் ரூ.1,35,31,290 வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'8 தோட்டாக்கள்' ஓப்பனிங் வசூல் எப்படி?

பிரபல இயக்குனர் மிஷ்கின் அவர்களின் உதவியாளரான ஸ்ரீகணேஷ் என்ற இயக்குனரின் முதல் படமான '8 தோட்டாக்கள்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது....

சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து. தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு நாட்களே இருந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென இந்த தொகுதியின் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் நியாயமாக தேர்தல் நடத்தும் சூழல் வந்தவுடன் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது...

தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் விஜய் ரசிகர்களுக்கு டபுள் விருந்து

இளையதளபதி விஜய் தற்போது 'தளபதி 61' படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் ஒரிரு நாட்களில் ராஜஸ்தானில் நடைபெறவுள்ளது. அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது...

இதுவரை நடிக்காத முக்கிய வேடத்தில் நயன்தாரா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனக்கு கிடைத்த பட்டத்திற்கு ஏற்ப நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டும் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டோரா' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது...

'காற்று வெளியிடை' கலெக்சன் குறித்த விபரங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிரமாண்டமாக கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் 'காற்று வெளியிடை...