close
Choose your channels

'தளபதி 63' டபுள் அப்டேட்: விஜய் ரசிகர்கள் உற்சாகம்

Wednesday, June 19, 2019 • தமிழ் Comments

விஜய் நடித்து வரும் 63வது படத்தை கடந்த ஐந்து மாதங்களாக 'தளபதி 63' என்றே அழைத்து வரும் விஜய் ரசிகர்கள் வரும் 21ஆம் தேதி 6 மணி முதல் இந்த படத்தின் டைட்டில் பெயரை சொல்லி அழைப்பார்கள். ஆம், 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெளியாகவிருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி விஜய் ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக இந்த படத்தின் செகண்ட்லுக் 22ஆம் தேதி அதிகாலை 12 மணிக்கு அதாவது விஜய்யின் பிறந்த நாள் தொடங்கும் நொடியில் வெளியாகவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 'தளபதி 63' படத்தின் அப்டேட் கேட்டுக்கொண்டிருந்த விஜய் ரசிகர்களுக்கு தற்போது டபுள் அப்டேட் கிடைத்துள்ளதால் ரசிகர்கள் டபுள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

தளபதி 63' படம் குறித்த அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடத்தில் இருந்தே சமூக வலைத்தளங்களில் இந்த படம் குறித்த ஹேஷ்டேக்குகள் டிரண்டுக்கு வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz