தமிழில் நாயகியாக அறிமுகமாகும் நட்சத்திர தம்பதியின் மகள்

  • IndiaGlitz, [Thursday,June 15 2017]

'இதுதாண்டா போலீஸ்' பட புகழ் டாக்டர் ராஜசேகர்- நடிகை ஜீவிதா தம்பதியினர் தமிழ், தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் பிரபலம் என்பது தெரிந்ததே. மேலும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் வெங்கட்பிரபுவின் 'R.K.நகர்' படத்தில் டாக்டர் ராஜசேகர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பதையும் சமீபத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் டாக்டர் ராஜசேகர்- நடிகை ஜீவிதா தம்பதியினரின் மகள் ஷிவானி விரைவில் ஒரு தமிழ்ப்படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளாராம். இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திரையுலகில் நுழைவது குறித்து ஷிவானி கூறுகையில் 'நான் தற்போது டாக்டருக்கு படித்து வருகிறேன். படிப்பு முடிந்ததும் நடிக்க முடிவு செய்துள்ளேன். மேலும் பரதநாட்டியம் , குச்சுபுடி போன்ற நடன வகுப்புகளுக்கு சென்று வருகிறேன். இசையிலும் எனக்கு ஆர்வம் உண்டு. கீ போர்ட் , கிடார் , வீணை ஆகியவற்றை நன்றாக வாசிப்பேன். அதுமட்டுமின்றி கிக்பாக்சிங்கும் பழகி வருகிறேன்.

எனக்கு பிடித்த நடிகர் தனுஷ், விஜய்சேதுபதி, விஷால். தனுஷின் '3' படம் பார்த்து அழுது இருக்கின்றேன்' என்று கூறியுள்ளார்.

More News

லட்சுமி மிட்டல், டி.ஆர்.பாலுவுடன் எனக்கு தொடர்பு உண்டு. கஸ்தூரி

நேற்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினின் சாலைமறியல் போராட்டத்தை நடிகை கஸ்தூரி கலாய்த்த விவகாரம் சூடு பிடித்து அவரை சமூகவலைத்தள பயனாளிகள் மிக மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்

இளையதளபதியிடம் சர்ப்ரைஸ் பிறந்த நாள் வாழ்த்து பெற்ற பிரபல பாடகர்

'நெருப்புடா' புகழ் பாடகர் அருண்காமராஜ் இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார்...

'தலைவெட்டும்' பிரச்சனையில் சிக்கிய பாபாராம்தேவ்: ஜாமீனி வெளிவர முடியாத வாரண்ட்

பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் கடந்த 2016ஆம் ஆண்டு கூறிய சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் அவருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது...

நயன்தாரா பட நடிகருக்கு 3வது திருமணமா?

பாலிவுட்டில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர் என பல அவதாரங்களில் தனது திறமையை வெளிக்காட்டி வரும் அனுராக் காஷ்யப், நயன்தாரா நடித்து வரும் 'இமைக்கா நொடிகள்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்...