பிரபல நடிகரின் குடும்பத்திற்கே கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் திரையுலகையும் விட்டு வைக்கவில்லை என்பதும் ஏற்கனவே அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய், நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜுன், சுமலதா, இயக்குனர் ராஜமவுலி, நடிகர் விஷால், தமன்னா உள்பட பல திரையுலக பிரமுகர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன் பின் குணமாகி வீடு திரும்பினார்கள் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகர், அவரது மனைவியும் நடிகையுமான ஜீவிதா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளுக்கும் கொரோனா வைரஸ் உறுதியாகி உள்ளது. இதனை டாக்டர் ராஜசேகர் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

எனக்கும் எனது மனைவிக்கும் குழந்தைகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது உண்மைதான். நாங்கள் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறோம். இரண்டு குழந்தைகளும் தற்போது நலமாக உள்ளனர். நானும் ஜீவிதாவும் குணமாகி வருகிறோம். விரைவில் முழுமையாக குணமாகி வீடு திரும்புவோம் என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து டாக்டர் ராஜசேகர் மற்றும் அவரது குடும்பத்தினரும் விரைவில் கொரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்ப வேண்டும் என தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 

More News

முகக்கவசம் இல்லாமல் பயணம் செய்த தமிழ் நடிகைக்கு அபராதம்: சுகாதாரத் துறை அதிரடி 

கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக மிக வேகமாக பரவி வரும் நிலையில் உலக சுகாதார மையம் முதல் உள்ளூர் சுகாதார துறை வரை அனைத்து மக்களும் மாஸ்க் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது

என் பட்டத்தை நீங்க எடுத்துட்டீங்களே: அர்ச்சனாவை அர்ச்சனை செய்த கமல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்து அனைத்து போட்டியாளர்களுக்கும் பட்டங்களை கொடுத்தார் என்பது தெரிந்ததே.

'சூரரை போற்று' ஓப்பனிங் ரீல் இதுதான்: ஜிவி பிரகாஷ் வெளியிட்ட வீடியோ!

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள 'சூரரை போற்று'திரைப்படம் வரும் 30ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன 

எங்களால் இந்தியாவையே கூறுபோட்டு பிரிக்க முடியும்… கோபத்தில் கொந்தளிக்கும் சீனா!!!

சீனா பல ஆண்டுகளாகவே ஹாங்காங், தைவான் போன்ற பகுதிகளை தனது அதிகாரத்தின்கீழ் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறது.

சுரேஷுக்கு ஹார்ட் கொடுத்த பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் முதலில் அனைத்து போட்டியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வில்லனாக தெரிந்தவர் சுரேஷ் சக்கரவர்த்தி. அனிதா சம்பத்துடன் எச்சில் விவகாரம்,