'அசுரன்' படத்தை விமர்சனம் செய்த ஸ்டாலினுக்கு  டாக்டர் ராமதாஸ் கேள்வி

  • IndiaGlitz, [Thursday,October 17 2019]

தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தை நேற்று பார்த்த திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்து கொண்டார்.

மேலும் இந்த படம் குறித்து அவர் கூறியபோது, ’பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த படத்தில் பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதை வெற்றிமாறன் அழுத்தமாக கூறியிருந்ததையே அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் முக ஸ்டாலினின் ‘அசுரன்’ படத்தின் விமர்சனம் குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் தனது டுவிட்டரில் கூறியபோது, ‘பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல... பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - ஆஹா.... அற்புதம்... அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்! என்று தெரிவித்துள்ளார்.

‘அசுரன்’ திரைப்படத்தை வைத்து அரசியல்வாதிகள் வழக்கம்போல் அரசியல் செய்ய் தொடங்கிவிட்டதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

More News

பெண் குயினாக மாறிய கீர்த்தி சுரேஷ்

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 

முக ஸ்டாலின் பாராட்டுக்கு தனுஷின் ரியாக்சன்

தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர்களும், அரசியல்வாதிகளும்

'கைதி' படத்தின் அடுத்த அப்டேட்!

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தீபாவளிக்கு வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ள தளபதி விஜய்யின் 'பிகில்' மற்றும் கார்த்தியின் 'கைதி' ஆகிய இரண்டு திரைப்படங்களின்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சாக்சியின் ஒருதலைக்காதல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வென்ற முகினையும் மக்களின் பேராதரவை பெற்ற லாஸ்லியா, கவின், தர்ஷன் போன்றவளையும் கோலிவுட் திரையுலகம் வரவேற்க காத்திருக்கும் நிலையில்

மீண்டும் இணையும் விஜய்சேதுபதி-அசோக்செல்வன்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மற்றும் அசோக் செல்வன் ஆகிய இருவரும் ஏற்கனவே 'சூதுகவ்வும்' மற்றும் 'ஆரஞ்சு மிட்டாய்' ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர்