கலக்குறீங்க ப்ரோ.. தளபதி விஜய் சந்திப்பு குறித்து பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி பதிவு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தளபதி விஜய்யை சந்தித்ததாகவும், இந்த சந்திப்பின்போது "கலக்குறீங்க ப்ரோ!" என்று விஜய் தனக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும், ’டிராகன்’ பட நடிகர் பிரதீப் ரங்கநாதன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள ’டிராகன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. திரையரங்கில் வெளியானதற்கு பிறகு, இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த நிலையில், தளபதி விஜய்யை பிரதீப் ரங்கநாதன் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ’விஜய்யை நான் சந்தித்த போது, ‘கலக்குறீங்க ப்ரோ’ என அவர் சொன்னபோது "நான் எப்படி உணர்ந்திருப்பேன் என்பதை நினைத்து பார்த்துக்கொள்ளுங்கள்!" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "விஜய்யின் இந்த வார்த்தைகளுக்கு நன்றி! அவருடைய ’சச்சின்’ படத்தின் ரீ-ரிலீஸுக்காக காத்திருக்கிறேன்!" என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
பிரதீப் ரங்கநாதனின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘ Kalakureenga Bro ‘ - How will i feel hearing this from Thalapathy . I know you all can understand how i would have felt .
— Pradeep Ranganathan (@pradeeponelife) March 24, 2025
Thankyou for the words and time sir .
Waiting for sachein re-release . pic.twitter.com/J7N3XsKOtU
My people know i have been working hard to meet him one day with full merit and work with him ! Working part i don’t know but i met him !! I sat right opposite to him ! Usually I talk too much and my team was waiting for me to talk since they know how much a fan i am ! He looked… pic.twitter.com/G2jpTWW6ss
— Ashwath Marimuthu (@Dir_Ashwath) March 24, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com