இளைஞர்கள் மனதில் விஷத்தை விதைக்க வேண்டாம்: கவுதம்மேனனுக்கு தமிழ் இயக்குனர் கோரிக்கை

பிரபல இயக்குனர் கவுதம்மேனன் சமீபத்தில் இயக்கிய ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படம் பெரும்பாலானோரால் வரவேற்பை பெற்று இணையதளங்களில் டிரண்ட் ஆகி வருகிறது. ஒருசிலர் இந்த குறும்படம் கள்ளக்காதலுக்கு வழிவகுப்பதாக புரிதல் இன்றி விமர்சனம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் கவுதம்மேனனுக்கு ‘திரெளபதி’ பட இயக்குனர் ஜி மோகன் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

கவுதம்மேனன் அவர்களே! பல இளைஞர்கள் உங்கள் திரைப்படம், மேக்கிங் ஸ்டைல், வசனங்கள், திரைப்பட தயாரிக்கும் முறை, பாடல்களில் உள்ள புதுமை ஆகியவற்றை ரசித்து வருகின்றனர். அவ்வாறு உங்கள் படங்களை ரசிக்கும் இளைஞர்களின் மனதில் விஷத்தை விதைக்க முயற்சிக்காதீர்கள். எங்களுடைய மனச்சோர்வை நீக்குவதற்கு நீங்கள் கண்டிப்பாக தேவை. ஒரு ரசிகனாக இது எனது கோரிக்கை என பதிவு செய்துள்ளார்.

இயக்குனர் மோகனின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். இரண்டே படங்கள் இயக்கிய மோகன், பல வெற்றி படங்களை இயக்கிய கவுதம்மேனனுக்கு அறிவுரை கூறுவதா? என்கிறரீதியில் பல கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகின்றன.

More News

4 மண்டலங்களில் மட்டும் 5467, 2000ஐ நெருங்கிய ராயபுரம்: சென்னை கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டிவிட்டது என்பதும் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை

வெற்றிமாறன் படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, ராதாரவி: ரகசியத்தை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'பொல்லாதவன்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இருவரும் மீண்டும் இணைந்த திரைப்படம் 'ஆடுகளம்'.

பிரதமர் மோடிக்காக அஜித், விஜய் நாயகி தயாரித்த பாடல்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு சில தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸை முடிந்த அளவு கட்டுப்படுத்துகிறது.

பங்காளி, மாமா, தங்கச்சி, பிரதர்: விஜய்சேதுபதி படக்குழுவினர்களுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறிய சூரி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் உருவாக்கிய 'க/பெ ரணசிங்கம்' என்ற திரைப்படத்தின் டீசர் இன்று காலை வெளியானது.

இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் வரலாறு தெரியுமா???

இந்தியாவில் அதிக வரிவருவாயை கொடுக்கும் இரண்டு டஜன் பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கின்றன