'த்ரிஷ்யம் 2' படப்பிடிப்பு தொடக்கம்: தமிழிலும் ரீமேக் செய்யப்படுமா?

  • IndiaGlitz, [Sunday,September 20 2020]

பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா உள்பட பலர் நடித்த ’த்ரிஷ்யம் திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல இந்திய மொழிகளில் ரீமேகாகி வெளியானது என்பதும் அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது

குறிப்பாக தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கி இருந்தார் என்பதும் இந்த படம் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் ’த்ரிஷ்யம் 2’ படம் குறித்த அறிவிப்பை இயக்குனர் ஜீத்து ஜோசப் வெளியிட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. கொச்சியில் நாளை முதல் படப்பிடிப்பு தொடங்குவதாகவும், படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு கொண்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

மோகன்லால் இந்த படத்தின் படப்பிடிப்பில் வரும் 26 ஆம் தேதி முதல் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது. முதல் பாகத்தில் நடித்த மோகன்லால் மற்றும் மீனா ஆகியோர் மீண்டும் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தை போலவே ‘த்ரிஷயம் 2’ படத்தின் தமிழ் ரீமேக் உருவாகுமா? அப்படியே உருவானாலும் அதில் கமல் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

More News

திருமணத்திற்காக மதம் மாறினாரா சஞ்சனா கல்ராணி? வைரலாகும் ஆவணங்கள்!

சமீபத்தில் போதைப்பொருள் வழக்கில் கன்னட நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் தெரிந்ததே

கணவருடன் லிப்லாக்: ரஜினி, விஜய் நாயகியின் புகைப்படம் வைரல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'சிவாஜி', தளபதி விஜய் நடித்த 'அழகிய தமிழ் மகன்' உள்பட பல தமிழ் திரைப் படங்களிலும் தெலுங்கு மற்றும் இந்திப் படங்களிலும் நடித்தவர் நடிகை ஸ்ரேயா

கடவுள் மனித உருவில் வந்துள்ளார்: மனித நேயமுள்ள வீடியோவை வெளியிட்ட 'தளபதி 65' இசையமைப்பாளர்!

இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ மிக வேகமாக வைரலாகி வருகிறது. ஒரு வீட்டில் இருந்து திடீரென குழந்தைகள் விளையாடும் சக்கர நாற்காலி ஒன்று வெளியே வந்து

ரூ.30 லட்சம் நன்கொடை: சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த நீதிபதி: 

கலைப்புலி S தாணு அவர்களின் தலைமையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஆயுள்காப்பீடு செய்ய வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது

ஒத்தாசைக்கு ஒத்த செருப்பை பயன்படுத்துங்கள்: சூர்யா விவகாரம் குறித்து பார்த்திபன்

நீட் தேர்வு குறித்து அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யாவுக்கு ஒரு பக்கம் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் ஒரு சிலர் மட்டும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.