'த்ரிஷ்யம்' திரைப்படத்தின் கதை சொந்த அனுபவமா? இயக்குனர் ஜீத்து ஜோசப் விளக்கம்

  • IndiaGlitz, [Wednesday,February 24 2021]

மோகன்லால், மீனா நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த ’த்ரிஷ்யம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து ஆறு ஆண்டுகள் கழித்து ’த்ரிஷ்யம் 2’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

இந்த படத்தில் மோகன்லாலின் மகள் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரு கொலையை செய்து விட அந்த கொலையை மறைத்து தண்டனையிலிருந்து தப்புவது தான் முதல் பாகத்தில் கதையாக இருந்தது. ’த்ரிஷ்யம்’ இரண்டாம் பாகத்தில் இந்த கொலை குறித்து போலீசாருக்கு ஒரு துப்பு கிடைத்ததையடுத்து மோகன்லால் குடும்பத்திற்கு மீண்டும் சிக்கல் ஏற்படுகிறது. அந்த சிக்கலில் இருந்து மோகன்லால் குடும்பம் தப்பியதா? என்பது தான் இந்த இரண்டாம் பாகத்தின் கதை

ஒரு இரண்டாம் பாகம் திரைப்படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்கும் இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் முதல் பாகம் போலவே இரண்டாவது பாடத்தையும் கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ’த்ரிஷ்யம்’ படத்தில் மோகன்லால் குடும்பத்தின் புகைப்படத்தையும், ஜீத்து ஜோசப்பின் குடும்பப் புகைப்படத்தையும் ஒப்பீடு செய்து ஒரு சில ரசிகர்கள் மீம்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். ஜீத்து ஜோசப்பிற்கும் இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் இந்த படத்தின் கதை இயக்குனரின் வாழ்க்கையில் நடந்ததா என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி மீம்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய ஜீத்து ஜோசப் கூறியபோது, ‘இந்த படத்தின் கதைக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் இது முழுக்க முழுக்க கற்பனைக்கதை என்றும் விளக்கமளித்துள்ளார்.

More News

ஷங்கரின் அடுத்த படத்தில் தென்கொரிய நடிகை தான் நாயகியா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் திரைப்படம் என்றாலே நட்சத்திர தேர்வு முதல் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வரை வித்தியாசங்கள் இருக்கும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் சமீபத்தில் ராம்சரண்தேஜா

சிவகார்த்திகேயனின் 'அயலான்' படம் குறித்த முக்கிய அப்டேட்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'டாக்டர்' திரைப்படம் மார்ச் 26ஆம் தேதி ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் நடித்து முடித்துள்ள இன்னொரு திரைப்படமான 'அயலான்'

ரஜினிக்கு கூட கிடைக்காத இண்ட்ரோ: 'கர்ணன்' படம் குறித்து தயாரிப்பாளர் பெருமிதம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கூட கிடைக்காத மாஸ் அறிமுக காட்சி 'கர்ணன்' படத்தில் தனுசுக்கு கிடைத்துள்ளதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ் தாணு தெரிவித்துள்ளார் 

விஜய்சேதுபதி-பொன்ராம் படம் தொடங்குவது எப்போது?

சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' 'ரஜினி முருகன்' 'சீமராஜா' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம். இவர் தற்போது 'எம்ஜிஆர் மகன்' என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.

'என்ன ஒரு அருமையான பரிசு': சூப்பர் ஸ்டாரின் மகளுக்கு அமிதாப் வாழ்த்து!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது மகள் எழுதிய புத்தகம் ஒன்றை அமிதாப்பச்சனுக்கு அனுப்பிய நிலையில் அந்த புத்தகத்தை பார்த்து 'என்ன ஒரு அருமையான பரிசு' என்று அமிதாப் பச்சன்