சீன மொழியில் வெளியாகிறது த்ரிஷ்யம்..!

  • IndiaGlitz, [Saturday,December 14 2019]

ஜீத்து ஜோசப் இயக்கி மோகன்லால், மீனா மற்றும் பலர் நடித்திருந்த த்ரிஷ்யம் படம் மலையாளத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியடைந்தது.

வெற்றிப்படம் ஆக மாறியதால் இந்த படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்தனர். தமிழில் கமலஹாசன் நடித்து ஜீத்து ஜோசப்பே இயக்கி பாபநாசம் என்ற பெயரில் வெளிவந்தது. அதே போல தெலுங்கு, இந்தி, கன்னடம், சிங்களம் போன்ற பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வெற்றி பெற்றது.

ஹிந்தியில் அஜய் தேவ்கனும், தெலுங்கில் வெங்கடேஷும், கன்னடத்தில் ரவிசந்திரனும் நடித்திருந்தார்கள். இப்போது இந்த படம் சீன மொழியில் ரீமேக் செயப்பட்டுள்ளது. A sheep without a shepherd என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் யாங் சியோ, சுஹோ டன், ஜோன் சென் போன்றோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வந்திருந்தது, தற்போது இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக மொழிகளில் ரீமேக் செய்யப்பட மலையாள படம் என்கிற பெருமையை த்ரிஷ்யம் அடைகிறது.

 

More News

உண்மையை சொன்னதற்கு மன்னிப்பு கேட்கனுமா, என் பெயர் ராகுல் "சாவர்க்கர்" இல்லை, ராகுல் "காந்தி"..!

"நாட்டில் நடந்து கொண்டிருக்கும் உண்மைகளைச் சொன்னதற்கு மன்னிப்பு கேட்க முடியாது. என் பெயர் ராகுல் சாவர்க்கர் இல்லை ராகுல் காந்தி" என்று இன்று மோடி ஆட்சிக்கு எதிராக

சென்னை நபரை வலைவீசி தேடும் சச்சின்: தமிழில் பதிவு செய்த டுவீட்

சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டல் ஊழியரை சந்திக்க விரும்புவதாகவும் அவரை கண்டுபிடிக்க தனக்கு உதவி செய்யும்படியும் சச்சின் டெண்டுல்கர் தமிழில் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளது

ஐதராபாத் என்கவுண்டரில் இறந்த குற்றவாளிகளின் பிணங்களுக்கு வாரம் ஒருமுறை ஊசி!

சமீபத்தில் ஐதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவர் நான்கு நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அதன் பின் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்.

சர்ச்சை கருத்துக்குப்பின் கமலஹாசனை சந்தித்த ராகவா லாரன்ஸ்

சமீபத்தில் நடைபெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த 'தர்பார்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகரும், நடன இயக்குனரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ்

செல்வராகவனின் அடுத்த பட ரிலீஸ் குறித்த தகவல்

பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த 'என்ஜிகே' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் இயக்கிய 'நெஞ்சம் மறப்பதில்லை'