'த்ரிஷ்யம்' படத்தின் மூன்றாம் பாகம் உருவாகிறதா?

  • IndiaGlitz, [Saturday,August 13 2022]

மோகன்லால், மீனா நடிப்பில் பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகிய 'த்ரிஷ்யம்’ திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும், மலையாளத்தில் உருவான இந்த படம் தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே.

தமிழில் கமல்ஹாசன், கௌதமி நடிப்பில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் 100 கோடிக்கும் அதிகமாக இந்த படம் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 'த்ரிஷ்யம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வெற்றி பெற்றதை அடுத்து மூன்றாம் பாகம் உருவாக்கும் முயற்சியில் படக்குழுவினர் ஈடுபட்டதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது 'த்ரிஷ்யம்’ படத்தின் மூன்றாம் பாகம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

'த்ரிஷ்யம்’ படத்தின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்த மோகன்லால், மீனா, எஸ்தர் அனில், ஆஷா சரத் உள்ளிட்டோர் 'த்ரிஷ்யம் 3’ படத்தில் நடிக்க இருப்பதாகவும் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் அனில் ஜான்சன் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

லோகேஷ் யூனிவெர்ஸுடன் இணைய காத்திருக்கிறேன்: பிரபல நடிகர் ஓப்பன் டாக்!

லோகேஷ் யூனிவெர்ஸுடன் இணைய காத்திருக்கின்றேன் என பிரபல நடிகர் ஓபன் ஆக தெரிவித்துள்ளார். 

அரவிந்த்சாமியின் அடுத்த படம் ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

 தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அரவிந்த் சாமியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெப்போட்டிஸம் குறித்த கேள்விக்கு நெத்தியடி பதில் கொடுத்த அதிதிஷங்கர்!

சினிமா துறையில் நெப்போட்டிஸம் அதிகமாகி வருவது குறித்த கேள்விக்கு பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் நெத்தியடி பதில் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நம்பர் ஒன் இடத்தை பெற்ற அமலாபால்: மகிழ்ச்சியில் பதிவு செய்த டுவிட்!

அமலாபால் நடித்து தயாரித்த 'கேடவர்' என்ற திரைப்படம் நம்பர் ஒன் இடத்தை பெற்றதையடுத்து அவர் மகிழ்ச்சியில் பதிவு செய்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது. 

சூர்யா- கார்த்தி படத்தை இயக்காததற்கு இதுதான் காரணம்: லோகேஷ் கனகராஜ்

சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து நடிக்கும் திரைப்படம் குறித்த ஐடியா தனக்கு வந்ததாகவும் இதுகுறித்து தயாரிப்பாளரிடம் ஆலோசனை செய்ததாகவும் ஆனால் அது நடைபெறாமல் போனதற்கான