close
Choose your channels

சிம்பு படத்தின் வில்லனாகும் 'த்ரிஷ்யம்' பட நடிகர்!

Tuesday, September 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் சிம்பு நடிப்பில், இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு. இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த பின்னர் தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் மும்பை சென்றுள்ளனர் என்றும் அங்கு சில நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை விரைவாக முடிக்க சிம்பு மற்றும் கவுதம் மேனன் முடிவு செய்துள்ளதால் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தில் வில்லன் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் வில்லனாக பிரபல மலையாள நடிகர் சித்திக் நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. இவர் ஏற்கனவே ’த்ரிஷ்யம்’, ‘ஒடியன்’ உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் என்பதும் தமிழில் தற்போது வில்லனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஆர் ரகுமான் இசையில் உருவாகிவரும் இந்த படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதி வருகிறார். கவிஞர் தாமரை பாடல் வரிகளில், சித்தார்த்தா நுனி என்பவரின் ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.