close
Choose your channels

சூர்யாவுக்கு நடிக்க தெரியாது என்பது உண்மைதான்: ‘சூரரை போற்று’ டப்பிங் கலைஞர்!

Thursday, November 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ள ‘சூரரை போற்று’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஊடகங்களும் சமூக வலைதள பயனாளிகளும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக சூர்யாவின் நடிப்பு மிக அபாரம் என்றும் சுதா கொங்கராவின் திரைக்கதை மிக அற்புதம் என்றும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ‘சூரரை போற்று’படத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் குறித்த ஒரு காட்சி வரும். இந்த கேரக்டருக்கு டப்பிங் கொடுத்துள்ள டப்பிங் கலைஞர் நவீன் முரளிதர் என்பவர் தனது பேஸ்புக்கில் இந்த படத்தில் தான் பணியாற்றியது குறித்து ஒரு பதிவு செய்து உள்ளார்.

அப்துல்கலாம் ஐயா அவர்களின் குரலில் பேச வாய்ப்பு கொடுத்த சூர்யா அவர்களுக்கு மிகவும் நன்றி. இந்த படத்தில் பணிபுரிய எனக்கும் ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்தது குறித்து நான் பெருமைப்படுகிறேன். மேலும் சூர்யா அவர்களுக்கு நடிக்க தெரியாது என்று யாரோ சொன்னாங்க, உண்மைதான். உங்களுக்கு நடிக்க தெரியாது, ஆனால் இந்த படத்தில் கேரக்டராகவே வாழ்ந்து காட்டி இருக்கின்றீர்கள்’ என்று கூறியுள்ளார். நவீனின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.