close
Choose your channels

விஷாலின் அடுத்த படத்தில் முக்கிய நடிகையாகும் டப்பிங் கலைஞர்!

Sunday, May 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் தற்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஆர்யாவுடன் ’எனிமி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஷால் நடிப்பில் உருவாகி வரும் ’துப்பறிவாளன் 2’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அறிமுக இயக்குனர் சரவணன் என்பவரின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் ஒரு திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் விஷால் ஜோடியாக டிம்பிள் ஹயாதி என்பவர் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல டப்பிங் கலைஞர் ரவீனா ரவி இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழ் திரையுலகின் பிரபல டப்பிங் கலைஞராக இருந்தாலும் இவர் ஏற்கனவே ’காவல்துறை உங்கள் நண்பன்’ மற்றும் ’ஒரு கிடாயின் கருணை மனு’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பதும் அந்த படங்களில் இவருடைய நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமுத்திரக்கனியின் ’சாட்டை’ என்ற படத்தின் மூலம் தனது டப்பிங் பணியை தொடங்கிய ரவீனா தற்போது பிஸியான டப்பிங் கலைஞர்களில் ஒருவராக இருந்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.