100 வருட சினிமாவுலகில் டைட்டிலில் முதலிடம் பெற்ற நாயகி

  • IndiaGlitz, [Saturday,March 11 2017]

தமிழ் சினிமா மட்டுமின்றி உலகின் எந்த மொழி சினிமாவாக இருந்தாலும் டைட்டிலில் முதலில் வருவது நாயகன் பெயர் தான் என்பது எழுதப்படாத விதி. இதற்கு ஆணாதிக்கம் என்று சொல்வதா? அல்லது ஹீரோதான் ஒரு படத்தின் முதுகெலும்பு என்பதால் டைட்டிலில் முதல் இடம் கிடைத்தது என்று கூறுவதா? என்று தெரியவில்லை.

இந்நிலையில் முதன்முதலாக ஒரு தமிழ் சினிமாவின் டைட்டிலில் நாயகி பெயர் முதலிடத்திலும் அதனை அடுத்து இரண்டாவதாக நாயகன் பெயரும் வரவுள்ளது. அந்த படம் தான் 'ஒரு கிடாயின் கருணை மனு"

பிரபல டப்பிங் கலைஞர் ரவீனா நாயகியாக அறிமுகமாகியிருக்கும் இந்த படத்தின் நாயகன் விதார்த். இதுகுறித்து விதார்த் வெளியிட்ட ஒரு காணொளி சமீபத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியானது. இந்த காணொளியில் விதார்த் கூறியிருப்பதாவது:

"ஆண்கள் நாம் அனைவரும் இங்கே இருப்பதற்கு மிக முக்கிய காரணம் பெண்கள் தான். அவர்களுக்கு இடம் கொடுக்க நாம் யார்? அவர்கள் தான் நமக்கு இடம் கொடுக்க வேண்டும். ஈரோஸ் நிறுவனமும், 'ஒரு கிடாயின் கருணை மனு' படக்குழுவினரும் இணைந்து ஒரு புதிய யோசனையை உருவாக்கி இருக்கின்றோம். இதுவரை படத்தில் கதாநாயகர்களின் பெயர் தான் முதலில் வரும். ஆனால், முதல் முறையாக எங்கள் படத்தின் கதாநாயகி ரவீனாவின் பெயரை 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தில் முதலாம் இடத்தில் குறிப்பிட்டு இருக்கின்றோம். எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினரின் சார்பிலும் 'மகளிர் தின' வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்" என்று உற்சாகமாக கூறுகிறார் நடிகர் விதார்த்⁠⁠⁠⁠.

'ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா லிமிடெட்' தயாரிப்பில், 'காக்கா முட்டை' மணிகண்டனின் உதவி இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கி இருக்கும் 'ஒரு கிடாயின் கருணை மனு'. படத்தில் ஒளிப்பதிவாளராக ஆர் வி சரண், இசையமைப்பாளராக ரகுராம், படத்தொகுப்பாளராக கே எல் பிரவீன் மற்றும் கலை இயக்குநராக டி கிராபோர்ட் ஆகியோர் பணியாறியுள்ளனர்.

More News

அரசியலில் இருந்து விலகுகிறேன் : இரோம் ஷர்மிளா அதிர்ச்சி அறிவிப்பு

பொது பிரச்சனை ஒன்றுக்காக ஒருநாள் ஜெயிலுக்கு போய்விட்டு வந்தாலே அதை விளம்பரப்படுத்தி வாக்காளர்களை கவர்ந்து வரும் அரசியல் உலகில்,  மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை (AFSPA) நீக்கக் கோரி 16 ஆண்டுகள் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்ட சமூக சேவகி இரோம் ஷர்மிளாவுக்கு கிடைத்தது வெறும் 90 வாக்குகளே...

ஆர்.கே ஐடியாவை பின்பற்றுவார்களா புதிய தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள்?

இந்த 21ஆம் நூற்றாண்டில் வானளவு வளர்ந்துள்ள தொழில்நுட்ப வளர்ச்சியை கிட்டத்தட்ட அனைத்து துறைகளும் பயன்படுத்தி கற்பனைக்கும் எட்டாத முன்னேற்றங்களை சந்தித்து வருகிறது.

இயக்குனர் செய்யாறு ரவி காலமானார்

பிரபு நடித்த 'தர்மசீலன்', கார்த்திக் நடித்த 'ஹரிச்சந்திரா' ஆகிய படங்களின் இயக்குனர் செய்யார் ரவி காலமானார்.

'பாகுபலி 2' டிரைலர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் 'பாகுபலி 2' படத்திற்கு இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மணிப்பூர்: 16 வருடங்கள் உண்ணாவிரதம் இருந்த சமூக சேவகிக்கு வெறும் 85 ஓட்டுக்கள்

சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் ஒன்று மணிப்பூர். இந்த மாநிலத்தில் ஆயுதப்படை சட்டத்தை எதிர்த்து இரோம் ஷர்மிளா என்ற சமூக சேவகி 16 வருடங்களாக உண்ணாவிரதம் இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த மணிப்பூர் சட்டமன்ற தேர்தலுக்காக புதிய கட்சி ஆரம்பித்து மாநிலம் முழுவதும் தேர்தலை சந்தித்தார் ஷர்மிளா...