கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பெரிய படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்!

  • IndiaGlitz, [Thursday,April 29 2021]

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதும் திரையரங்கு மூடப்பட்டது உள்பட திரையுலகினர்களுக்கும் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக ஒரு சில பெரிய திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சூர்யா நடித்து வரும் ’சூர்யா 40’ விக்ரம் நடித்து வரும் ’விக்ரம் 60’ சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’டான்’ உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

இருப்பினும் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ உள்ளிட்ட ஒரு சில படங்களின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களுக்கு நடைபெறும் என்று தெரிகிறது. மேலும் படப்பிடிப்பு நடத்துவதற்கு இதுவரை அதிகாரப்பூர்வமாக அரசிடமிருந்து தடை விதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.