close
Choose your channels

'சீதா நீ யாரு? : துல்கர் சல்மான், ராஷ்மிகாவின் 'சீதா ராமன்' டீசர்!

Saturday, June 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் துல்கர் சல்மான் மற்றும் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த ’சீதாராமன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. ஒரே ஒரு நிமிடம் மட்டுமே உள்ள இந்த டீசரில் ’காஷ்மீரில் ராணுவத்தில் பணிபுரியும் துல்கர் சல்மான் தனக்கு யாரும் இல்லை என்று தெரிவிக்க, இந்த தகவலை வானொலி மூலம் தெரிவிக்கும் பெண் ஒருவர் பொதுமக்களுக்கு தெரிவித்ததன் காரணமாக ஏராளமான கடிதங்கள் துல்கருக்கு குவிகின்றது.

அதில் சீதா என்ற பெண் ’நீங்கள் தாலி கட்டிய மனைவி நான் இருக்கிறேன் என்று கடிதம் எழுதி இருக்க அந்த கடிதத்தை ஆச்சரியமாக பார்க்கும் துல்கர் சல்மான், ‘சீதா நீ யார் என்று கேட்பதுடன் இந்த டீசர் முடிவுக்கு வருகிறது. இந்த டீசர் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடிப்பில் உருவாகி இந்த படத்தை ஹனு ராகவாபுடி என்பவர் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.