முதல்முறையாக தமிழ்ப்பாடலை பாடிய துல்கர் சல்மான்: வைரல் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Wednesday,April 14 2021]

பிரபல நடன இயக்குனர் பிருந்தா தற்போது ’ஹே அனாமிகா’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் நாயகனாக துல்கர் சல்மான் நடித்து வருகின்றார் என்பதும், நாயகியாக காஜல் அகர்வால் நடித்து வருகின்றார் என்பதும் தெரிந்ததே. மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் அதிதிராவ் ஹைத்தி நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும் தெரிந்ததே.

கோவிந்த் வசந்தா இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நாயகன் துல்கர் சல்மான் இந்த படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார். மதன் கார்க்கி எழுதிய இந்த பாடலின் ஒலிப்பதிவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் துல்கர்சல்மான் பாடும் முதல் தமிழ் பாடல் இது என்பதும் இந்த பாடல் சிங்கிள் பாடலாக விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

'குக் வித் கோமாளி' பிரபலம் திறந்த கடைக்கு சீல்; ரூ.5 ஆயிரம் அபராதம்

https://www.hindutamil.in/news/tamilnadu/658881-cook-with-komali-actor-who-went-to-the-store-opening-ceremony-the-store-was-sealed-due-to-the-crowd.html

'மாஸ்டர்' தயாரிப்பாளரின் அடுத்த படம்: அஜித் பட இயக்குனருக்கு வாய்ப்பு!

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தனது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஒரே நாளில் ரிலீஸாகும் சிவகார்த்திகேயன் - விஜய் ஆண்டனி திரைப்படங்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் திரையுலகில் கூறப்படுவதால்

கிளாமர் போஸ் கொடுத்து தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து கூறிய ஷிவானி! குவியும் கமெண்ட்ஸ்கள்!

தமிழகம் உள்பட உலகெங்கும் உள்ள தமிழர்கள் இன்று தமிழ் புத்தாண்டு தினத்தை கொண்டாடி வரும் நிலையில் பிரதமர் மோடி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் திரையுலக பிரபலங்களும்

பிஎம்டபிள்யூ கார் வாங்கிய ரம்யா பாண்டியன்: ரஜினி ஸ்டைலில் வாழ்த்து கூறிய சகோதரர்

பிக்பாஸ் சீசன் 4 மற்றும் குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவராகிய ரம்யா பாண்டியன் தற்போது புதிய பிஎம்டபிள்யூ கார் வாங்கி உள்ளார்.