close
Choose your channels

20 வருஷத்துக்கு முன் எழுதிய லட்டரை சீதாகிட்ட சேர்ப்பது எப்படி? 'சீதாராமன்' டிரைலர்!

Tuesday, July 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகிய ’சீதாராமன்’ என்ற வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி வைரலாகி வருகிறது

20 வருடங்களுக்கு முன்னர் ராணுவத்தில் வேலை பார்க்கும் துல்கர் சல்மான் எழுதிய கடிதத்தை சீதாவிடம் சேர்க்க வேண்டிய பொறுப்பு ராஷ்மிகா மந்தனாவிடம் அளிக்கப்படும் நிலையில் அவர் அந்த கடிதத்தை சீதாவிடம் சேர்த்தாரா? என்பதுதான் இந்த படத்தின் கதை. அவர் சீதாவை தேடிச் செல்லும்போது ஏற்படும் பிரச்சனைகள் அதனால் வெளிப்படும் உண்மைகள் இந்தப் படத்தின் கதையில் உள்ள திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வித்தியாசமான ரொமான்ஸ் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா , மிருணாள் தாக்கூர், வெண்ணிலா கிஷோர், பூமிகா உள்பட பலர் நடித்துள்ளனர். தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தை ஹனு ராகவ்புடி இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையில் உருவாகியுள்ள இந்த படம் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.