டிசம்பர் 31ல் 'டங்கி' படத்தின் வசூல் இத்தனை கோடியா? சாதனை செய்த ஷாருக்கான்..!

  • IndiaGlitz, [Tuesday,January 02 2024]

கடந்த ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31 ல், 11.25 கோடியை வசூலித்து ‘டங்கி’ திரைப்படம் சாதனை படைத்திருக்கிறது

புதிய ஆண்டு பிறந்து விட்டது. டங்கி பட பாக்ஸ் ஆபிஸ் வசூல் இன்னும் தொடர்கிறது. படம் வெளியான நாளில் 30 கோடியில் ஆரம்பமான இப்பட வசூல், ரசிகர்கள் ஆதரவுடன் உயர்ந்து வருகிறது. ரசிகர்களின் பாசிட்டிவ் வார்த்தையுடன், குடும்ப பார்வையாளர்கள் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களிடம் இருந்து அபரிமிதமான அன்பைப் பெற்று வருகிறது இப்படம். இரண்டாவது வாரத்தில் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருவதுடன், புத்தாண்டு கொண்டாட்டமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அட்டகாசமான வசூலைக் குவித்துள்ளது.

இந்த ஆண்டின் இறுதி நாளில் இரட்டை இலக்கத்தில் கோடிகளை குவித்துள்ளது இப்படம். இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் டங்கி டிசம்பர் 30 சனிக்கிழமை அன்று 9 கோடியை ஈட்டியது.; டிசம்பர் 31 ஞாயிறு அன்று இப்படம் 11.25 கோடி வசூல் செய்தது. இதன் மூலம், இந்தியாவில் படத்தின் உள்நாட்டு மொத்த வசூல் 188.07 கோடியை எட்டியுள்ளது. வார இறுதி நாளில் 38 சதவீதத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இப்படத்தை கண்டுகளித்துள்ளனர். இந்த விடுமுறை காலத்தை கொண்டாட, குடும்ப பார்வையாளர்களுக்கு ஒரு அருமையான படைப்பாக டங்கி அமைந்திருக்கிறது. உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சூப்பர் ஸ்டெடியாக 380.60 கோடியை எட்டியுள்ளது. இப்படம் இந்தியாவில் 200 கோடியையும் உலகளவில் 400 கோடியையும் விரைவில் கடக்கவுள்ளது.

இப்படத்தில் ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திர குழு 'டங்கி' திரைப்படத்தில் நடித்துள்ளது.

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி 2023 டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

More News

பூகம்பத்தின் போது குடும்பத்துடன் ஜப்பானில் இருந்த பிரபல நடிகர்.. என்ன ஆச்சு?

ஜப்பானில் நேற்று பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் பிரபல நடிகர் தனது குடும்பத்துடன் ஜப்பானில் தான் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அவருக்கு என்ன ஆச்சு?என்று ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

பகத் பாசில் - வடிவேலு படத்தின் கதை இதுதான்.. வடிவேலு ஜோடியாகும் 90களின் பிரபல நாயகி..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'மாமன்னன்' திரைப்படத்தில் பகத் பாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடித்த நிலையில் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை

சென்னை நேரு ஸ்டேடியத்தில் தனுஷின் 'கேப்டன் மில்லர்' விழா.. சத்யஜோதி பிலிம்ஸ் அறிவிப்பு..!

சென்னை நேரு ஸ்டேடியத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தின் பிரி ரிலீஸ் விழா நாளை நடத்தப்படும் என சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரும்பலகையில் இருந்த ஹிந்தியை மட்டும் அழித்த கீர்த்தி சுரேஷ்.. வைரல் வீடியோ..!

கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்துள்ள 'ரகு தாத்தா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

என்னை யூஸ் பண்ணி கசக்கி தூக்கி போட்டுட்டிங்க.. பூர்ணிமா குற்றஞ்சாட்டுவது யாரை?

 என்னை யூஸ் பண்ணி கசக்கி தூக்கி போட்டு விட்டீர்கள் என பூர்ணிமா சக போட்டியாளர் ஒருவரை குற்றம் சாட்டும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.