close
Choose your channels

மருத்துவத் துறையில் முன்னோடியாக விளங்கும் தமிழகம்!!! முதல்வரின் அதிரடி நடவடிக்கைகள்!!!

Monday, August 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மருத்துவத் துறையில் முன்னோடியாக விளங்கும் தமிழகம்!!! முதல்வரின் அதிரடி நடவடிக்கைகள்!!!

 

தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் மத்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்தவகையில் இதுவரை மருத்துவக் கல்லூரிகள் இல்லாத 11 தமிழக மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கான அடிக்கல் நாட்டலைத் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாட்டி துவக்கி வைத்திருக்கிறார். இத்தகைய திட்டங்களினால் மருத்துவத் துறையில் இந்திய அளவில் தமிழகம் முன்னோடி மாநிலமாக மாறியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மொத்தம் 23 மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான ஒப்புதலை இந்திய மருத்துவக் கழகம் வழங்கியிருக்கிறது. இதன்மூலம் ஒவ்வொரு கல்லூரிகளிலும் 150 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தைத்தான் தற்போது தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இதற்கான ஏற்பாடுகள் கடந்த 2017 ஆம் ஆண்டு முதலே தொடங்கப்பட்டு விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டையில் கடந்த 2017–18 ஆம் கல்வியாண்டில் 150 மாணவர்களுடன் புதிய அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. அடுத்து 2019-20 ஆம் கல்வியாண்டில் கரூர் மாவட்டத்தில் 150 மாணவர்களுடன் புதிய மருத்துவக் கல்லூரியும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இயங்கிவந்த ஐ.ஆர்.டி மருத்துவமனை கடந்த 2019-20 ஆம் கல்வியாண்டில் அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.345 கோடியில் அமையவுள்ள புதிய மருத்துவக் கல்லூரிக்கான பணித்திட்டங்களை கடந்த மார்ச் 1 ஆம் தேதி தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். அடுத்து, ரூ.380 கோடி செலவில் அமையவுள்ள விருதுநகர் மாவட்டத்தின் புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு கடந்த மார்ச் 3 ஆம் தேதி முதல்வர் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். தொடர்ச்சியாக மார்ச் 4, மார்ச் 6, மார்ச் 7 மற்றும் மார்ச் 8 ஆகிய தேதிகளில் முறையே கிருஷ்ணகிரி, நாமக்கல், நாகப்பட்டிணம், திருப்பூர் மாவட்டங்களில் அமையவுள்ள புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமையவுள்ள அரசு மருத்துவக் கல்லூரி ரூ.348 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட இருக்கிறது. நாமக்கல் மருத்துவக் கல்லூரியானது ரூ.338.76 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட இருக்கிறது. திருப்பூர் மருத்துவக் கல்லூரி-ரூ.336 கோடி மதிப்பீட்டிலும் நாகப்பட்டிணம் மருத்துவக் கல்லூரி- ரூ.366 கோடி மதிப்பீட்டிலும் உருவாக்கப் பட இருக்கிறது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.327 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவை கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதல்வர் தொடங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மே மாதம் 19 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.385 கோடியே 63 லட்சம் மதிப்பில் உருவாகவுள்ள புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த மருத்துவக் கல்லூரிக்கு மத்திய அரசு 60% நிதியுதவி (ரூ.195) அளிக்கும் எனவும் தமிழக அரசு சார்பில் ரூ.190 கோடியே 63 லட்சம் கோடியும் செலவழிக்கப்படும் எனக் கூறப்பட்டு இருந்தது. அதைத்தவிர கள்ளக்குறிச்சியில் ஜுலை 4 ஆம் தேதி ரூ.381.76 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டலை தமிழக முதல்வர் துவங்கி வைத்தார். அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஜுலை 8 ஆம் தேதி ரூ.347 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடத்தப்பட்டது.

இறுதியாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜுலை 10 ஆம் தேதி ரூ.447.32 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதனால் தமிழகத்தில் இருந்த 23 மருத்துவக் கல்லூரிகள் தற்போது 34 ஆக மாறவுள்ளது. இந்திய அளவில் அதிக மருத்துவக் கல்லூரி உள்ள மாநிலமாகத் தமிழக முன்னிலை வகிக்க இருக்கிறது. இந்தக் கல்லூரிகளின் மூலம் ஆண்டுதோறும் 1650 மருத்துவர்களை உருவாக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகம் மருத்தவக் கட்டமைப்பில் சிறந்த மாநிலமாக உருவாக்கப்பட வேண்டும் என்ற முனைப்பில் இத்திட்டங்களை தமிழக முதல்வர் மேற்கொண்டு வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் திட்டப்பணிகள் முறையாக செயல்படுத்தப்பட்டு வருவதும் சிறப்புக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.