மறுபடியும் நிலநடுக்கம்… நிலைகுலைந்து போன பப்புவா நியூ கினியா!!!

  • IndiaGlitz, [Monday,August 03 2020]

 

இந்தோனேசியாவிற்கு அருகில் இருக்கும் தீவு நாடான பப்புவா நியூ கினியாவிற்கு அடிமேல் அடி விழுந்து கொண்டே இருக்கிறது. கடந்த ஜுலை 17 ஆம் தேதி நியூ கினியாவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதோடு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றும் அப்பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகப் பரபரப்பு செய்திகள் வெளியாகி இருக்கிறது. தென்மேற்கு பசிபிக் பகுதியில் இருக்கும் இந்த தீவில் வடக்கு லோரேங்காவ் பகுதியில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் இது பூமிக்கடியில் 10 கி.மீ ஆழத்தில் இருந்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சில நிமிடங்கள் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், வணிக வளாகங்கள், கட்டிடங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது என்றும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் கடந்த ஜுலை 17ஆம் தேதி உணரப்பட்ட நிலநடுக்கம் இதைவிட பயங்கரமாக இருந்ததாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்து இருந்தது. ரிக்டர் அளவில் 7.2 ஆக உணரப்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் நிகழவில்லை என்றாலும் பாதிப்புகள் அதிகமாக இருந்தது எனவும் செய்திகள் தெரிவித்து இருந்தன. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.