'ஈஸ்வரன்' இயக்குனர் வீட்டில் நிகழ்ந்த சோகம்: திரையுலகினர் இரங்கல்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று சுசீந்திரன் இல்லத்தில் நடந்த சோக நிகழ்வால் திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

’ஈஸ்வரன்’ இயக்குனர் சுசீந்திரனின் தாயார் ஜெயலட்சுமி என்பவர் மாரடைப்பால் இன்று காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 62. ஈஸ்வரன் திரைப்படத்தின் ரிலீஸ் காரணமாகவும் நல்ல வரவேற்பு காரணமாகவும் மகிழ்ச்சியில் இருந்த சுசீந்திரன் குடும்பத்தில் திடீரென ஒரு சோக நிகழ்வு நிகழ்ந்துள்ளதால் அவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். 

இந்த நிலையில் தாயாரை இழந்து வாடும் சுசீந்திரன் அவர்களுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் பலர் நேரில் சென்று சுசீந்திரன் தாயாருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மெரீனாவுக்கு செல்ல தமிழக அரசு தடை: எத்தனை நாள் தெரியுமா?

பொங்கல் பண்டிகையையொட்டி மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை இன்று அமலுக்கு வந்துள்ளது.

விவசாயத்தை தவிர எது பண்ணுனாலும் வருமானம் வரும்போல: 'வெள்ளை யானை' டிரைலர்!

தமிழ் திரையுலகில் விவசாயம் மற்றும் விவசாயிகள் குறித்து திரைப்படங்கள் கடந்த சில ஆண்டுகளில் அதிகம் வெளி வந்து கொண்டிருக்கிறது என்பது தெரிந்ததே

இளையராஜா இசையில் 'பொன்னியின் செல்வன்': அதிகாரபூர்வ அறிவிப்பு!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' என்ற திரைப்படம் உருவாகி வருகிறது என்பதும் அமரர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தில் விக்ரம்,

'மாஸ்டர் தி பிளாஸ்டர்': 'மாஸ்டர்' படத்தின் சக்சஸ் பாடல் ரிலீஸ்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும், இந்த படம் நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் ரூபாய் 55 கோடி வரை வசூல் செய்தது

டெஸ்ட் போட்டியில் இடம் பிடித்த நடராஜன்: மேலும் ஒரு தமிழக வீரரும் அறிமுகம்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று பிரிஸ்பேன் நகரில் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கிய நிலையில் இன்றைய போட்டியில் இரண்டு தமிழக வீரர்கள்