close
Choose your channels

பிரம்ம முகூர்த்தத்தில் 'ஈஸ்வரன்' டீஸர்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

Friday, November 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு, நிதி அகர்வால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய ’ஈஸ்வரன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ’ஈஸ்வரன்’ படத்தின் டீசர் தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சற்று முன் இந்த படத்தின் டீசர் நாளை அதிகாலை 4:32 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் நள்ளிரவு 12 மணி அல்லது பகலில் ஏதாவது ஒரு நேரத்தில் தான் டீசர், டிரைலர் வெளியாகும். ஆனால் வித்தியாசமாக 4:32 மணிக்கு ’ஈஸ்வரன்’ படத்தின் டீசர் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

அதிகாலை 4:32 என்பது பிரம்ம முகூர்த்தம் என்றும், அதனால் அந்த நேரத்தில் ’ஈஸ்வரன்’ டீசர் வெளியிடவிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தீபாவளியன்று அதிகாலையே அனைவரும் எழுந்துவிடுவார்கள் என்பதால் சரியான நேரத்தில் டீசர் வெளியாகிறது என்பது மட்டுமின்றி டீசருடன் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டம் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.