மக்கள் நெஞ்சில் ஏகபோக வரவேற்பை பெற்ற தமிழக முதல்வர்!!! மீண்டும் தலைமையேற்க ஆதரவு!!!

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் தொடர்ந்து அதிமுகவை வழிநடத்தி வரும் ஒரு மாபெரும் தலைவராக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். மேலும் உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில் இந்திய அளவில் அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலமாகத் தமிழகத்தை ஏற்றம்பெற செய்துள்ளார். அதன்மூலம் தமிழக இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துள்ளார் எனவும் அமைச்சர் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழக முதல்வர் அதிரடியாகச் செயல்பட்டு பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். அவரது நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமானோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. அதோடு ஊரடங்கு காலத்தில் வீழ்ந்த பொருளாதாரம் தற்போது முதல்வரின் அதிரடி நடவடிக்கையால் சரிசெய்யப் பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் அவருக்கு நற்பெயரும் வரவேற்பும் கிடைத்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

கட்சிக்குள் பனிப்போர் நிலவுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில், மூத்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், கழகத் தொண்டர்கள் என அனைவரையும் தனது நிர்வாகத் திறனால் கவர்ந்து இழுத்திருக்கிறார். மேலும் தனது கட்சிக்குள் இருப்பவர்களை அரவணைத்துப் போகும் நற்குணத்தையும் அவர் பெற்றிருக்கிறார். இதனால் செப்டம்பர் 29 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் பெரும்பாலான ஆதரவுக் குரல்கள் எடப்பாடியாருக்கே கிடைத்தது.

இந்நிலையில் மக்கள் மத்தியிலும் நற்பெயரைச் சம்பாதித்து உள்ள முதல்வருக்கு ஆதரவுகள் கூடிக்கொண்டே வருவதாகத் தகவல்கள் கூறப்படுகிறது. மக்களின் குறைகளை உடனடியாகப் போக்கும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். இதனால் அதிமுக கட்சியின் பெரும்பாலான எம்எல்ஏக்கள் அடுத்த முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்தால் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக நம்புவதாகவும் கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருக்கிறது.