விஸ்வரூபம்' விஷயத்தில் நன்றி மறந்துவிட்டார் கமல். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

  • IndiaGlitz, [Wednesday,March 15 2017]

உலகநாயகன் கமல்ஹாசன் சமீபகாலமாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வரும் ஆவேசமாக கருத்துக்கள் ஒருசில அரசியல்வாதிகளை எரிச்சல் அடைய செய்துள்ளன. பெருவாரியான பொதுமக்களின் எண்ணங்களையே அவர் பிரதிபலித்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் அவர் மீது பதில் தாக்குதல், போலீஸ் புகார் உட்பட அரசியல்வாதிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அவர் கொடுத்த பேட்டி அரசியல்வாதிகளை மேலும் ஆத்திரமூட்டியுள்ளது. கடந்த தேர்தலில் பொதுமக்கள் வேறு ஒரு தலைமைக்குத்தான் ஓட்டு போட்டார்கள் என்றும், இன்று அவர் உயிருடன் இல்லாததால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று ஆணித்தரமான கருத்தை அந்த பேட்டியில் பதிவு செய்தார்

கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு ஏற்கனவே அமைச்சர் ஒருவர் பதில் கூறியுள்ள நிலையில் நேற்று சேலத்தில் நடந்த அரசு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கமலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஆட்சி தொடரக்கூடாது என்று கூறும் கமல்ஹாசன் எந்த கிராமத்துக்காவது சென்று மக்களை சந்தித்திருப்பாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் விஸ்வரூபம் படம் வெளியாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உதவி செய்ததாகவும், அந்த நன்றியை கமல்ஹாசன் மறந்து விட்டு பேசுவதாகவும் கூறிய முதல்வர், 65 வயதுக்கு பிறகுதான் அவருக்கு ஞானோதயம் வந்துள்ளதாக கூறினார். ஆனால் உண்மையில் கமல்ஹாசனுக்கு 62 வயதுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினி, கமல் பட நடிகையின் கணவர் திடீர் தற்கொலை

சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த பிரபல நடிகை ஜெயசுதாவின் கணவர் நிதின்கபூர் நேற்றிரவு திடீரென அவரது வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது...

கோவாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது? சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற கோவா மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான 21 தொகுதிகளை எந்த கட்சியும் பெறவில்லை. காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் பாஜக 13 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றது...

ஆர்.கே.நகர் பாஜக வேட்பாளர் கெளதமியா?

பிரபல நடிகை கெளதமி, நடிப்பில் மட்டுமின்றி சமூகசேவையிலும் ஈடுபட்டு வருபவர் என்பதும் மனதில் தோன்றிய கருத்துக்களை தைரியமாக வெளிப்படுத்துபவர் என்பதும் அனைவரும் அறிந்ததே. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து இன்று பல அரசியல் கட்சி தலைவர்கள் சந்தேகம் எழுப்பி வரும் நிலையில் இதுகுறித்து முதன்முதலாக தைரிய

ஒருபக்கம் விபூதி, இன்னொரு பக்கம் குங்குமம். தமிழக அரசியலில் ஆன்மீகம்

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தனியாக பேரவை ஒன்றை ஆரம்பித்து அரசியலில் சமீபத்தில் நுழைந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே

நடிக்க வாய்ப்பு கேட்ட பெண்ணிடம் சில்மிஷம். பிரபல தயாரிப்பாளர் கைது

நடிகர், நடிகைகளின் ஆடம்பரமான வெளிப்புற பகட்டை நம்பி திரையுலகில் நாமும் சாதிக்கலாம் என்று நாள்தோறும் புதிய முகங்கள் திரையுலகில் நுழைய முயற்சித்து வருகின்றனர்.