எத்தனை புயல் வந்தாலும் அசையாத ஆலமரம் எடப்பாடி பழனிசாமி… சர்வேக்களில் முதன்மை!

தமிழகச் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டவுடன் கட்சிக்குள் பிளவு ஏற்படும் என்ற சூளுரையை பலரும் கூறிவந்தனர். ஆனால் கட்சியின் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் வந்த அனைத்து சிக்கல்களையும் எதிர்க்கொண்டு தற்போது முதல்வர் வேட்பாளராக உயர்ந்து நிற்கிறார். மேலும் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் ஆளுமை மிக்க மனிதராகவும் எடப்பாடி பழனிசாமி உயர்ந்து உள்ளார்.

கொரோனா நேரத்தில் மக்களுக்கு நிதியுதவியை வழங்கியது, உணவுப் பொருட்களை வீட்டிற்கே சென்று வழங்கியது, நிவர், புரவி போன்ற புயல்களை எதிர்க்கொண்டு அந்தச் சமயத்தில் விவசாயிகளுக்கு உதவியது, தற்போது விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில் மும்முனை மின்சாரத்தை இலவசமாக்கியது, விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை தள்ளுபடி செய்தது, ஏழை மற்றும் எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு நகைக்கடனை தள்ளுபடி செய்தது எனத் தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த வகையிலும் எடப்பாடி பழனிசாமி மக்கள் மனதில் உயர்ந்து நிற்கிறார்.

மேலும் அதிமுகவிற்கு வர இருந்த பல்வேறு சிக்கல்களை மிகச் சரியாக எதிர்க்கொண்டதன் மூலம் தற்போது தேர்தலுக்கு தயாராகி வருகிறார். இதனால் அதிமுக பாதையில் வேறு எந்த தீயச் சக்திகளும் இல்லை என்பது உறுதியாகி உள்ளது. இதனால் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு சாதகமான சூழலே நிலவி வருகிறது எனப் பல தரப்பிலும் இருந்து கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன.