அம்மா வழியில் பெண்களுக்கு நலத்திட்டம்… முதல்வர் வாக்குறுதி!

நேற்று (மார்ச் 8) மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்துப் பெண்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதோடு மேலும் அம்மா வழியில் பெண்களுக்கு அனைத்து நலத்திட்டங்களும் கொண்டு வரப்படும் என்றும் வாக்குறுதி அளித்து இருந்தார்.

இந்த அறிவிப்பை ஒட்டி நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் ஒவ்வொரு குடும்ப அட்டைத்தாரப் பெண்களுக்கும் 6 கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்றும் பொருளாதார சமநிலையை மேம்படுத்துவதற்காக ரூ.1,500 ஊதியத் தொகை கொடுக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார். இந்த அறிவிப்பை ஒட்டி பலரும் தமிழக முதல்வருக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக அரசு தமிழகத்தில் முதன் முறையாக உள்ளாட்சித் தேர்தல்களில் 50% ஒதுக்கீடு செய்து அத்திட்டத்தை கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அமல்படுத்தவும் செய்தது. அதோடு இருசக்கர வாகனங்களுக்கு 25 ஆயிரம் மானியத் தொகை வழங்கி வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. அதோடு பெண்களின் கர்ப்பக் காலத்தில் ஊக்கத் தொகை, குழந்தைப் பிறக்கும்போது ஊக்கத்தொகை மற்றும் திருமணத்தின்போது தாலிக்கு 8 கிராம் தங்கம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி இருந்தது. அந்த வகையில் தற்போது வரப்போகும் சட்டப்பேரவை தேர்தலுக்கும் முதல்வர் பல நலத்திட்டங்களை அறிவிப்பார் என்று எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் 46 தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடும் போட்டி சென்னையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நடிகர் அஜித் குமார் 6 பதக்கங்களை வென்று இருந்தார். அவருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துக் கொண்டார்.

More News

கர்ப்பிணி தோழியுடன் நடனமாடிய சுனிதா: வைரலாகும் பழைய வீடியோ!

'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் ஒவ்வொரு சனி ஞாயிறும் இந்த நிகழ்ச்சிக்காக காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து

பெண்களின் மேம்பாட்டுக்காக 6 கேஸ் சிலிண்டர், ரூ.1,500- முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி!

வரும் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் தற்போது அதிமுக இறுதிக்கட்டத்தை எட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

வீல் சேரில் இருந்தபடியே கின்னஸ் சாதனை… இளம்பெண்ணின் தில்லான அனுபவம் குறித்த வீடியோ!

இன்றைய காலக்கட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் எவ்வளவோ நவீன வசதிகளுடன் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருவதாக நாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம்

மணிரத்னம் படத்தில் இருந்து விலகிய பிரபலம்: அவருக்கு பதில் இவரா?

மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவரது தயாரிப்பில் உருவாகிவரும் 'நவரசா'

'மாஸ்டர்' ஸ்டைலில் 'ஷ்....' புகைப்படம்: சீரியல் நடிகை கலக்கல்

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பதும் இந்த திரைப்படம் சுமார் 300 கோடி வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே