சனிக்கிழமை கூடுகிறது சட்டமன்றம். பெரும்பான்மை கிடைக்குமா?

  • IndiaGlitz, [Thursday,February 16 2017]

தமிழக முதல்வராக இன்று மாலை பொறுப்பேற்று கொண்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு 15 நாள் அவகாசம் கவர்னர் கொடுத்திருந்த போதிலும் வரும் சனிக்கிழமையே சட்டமன்றத்தை அவர் கூட்டி நம்பிக்கை வாக்கு கோரப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே கூவத்தூரில் கடந்த பத்து நாட்களாக தங்கியிருப்பதால் அவர்களுடைய தொகுதி பணிகள் பாதிப்பு அடைந்துள்ளது. இதனால் மக்கள் அதிருப்தியில் இருப்பதால் இன்னும் 15 நாட்களுக்கு அவர்களை அங்கு தங்க வைத்தால் அதுவே சிக்கல்களுக்கு காரணமாகிவிடும் என்பதால் உடனடியாக அவர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

124 எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் இருப்பதாக முதல்வர் தரப்பில் கூறினாலும் உண்மையில் எத்தனை பேர் உள்ளனர் என்ற எண்ணிக்கை ஊடகங்கள் உள்பட வெளியாட்களுக்கு தெரியவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் அரசியல் குழப்பங்களுக்கு சனிக்கிழமை இறுதித்தீர்வு ஏற்படுமா? அல்லது தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

அடுத்த 4 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் சிறை ஆட்சி. மார்க்கண்டேய கட்ஜூ வேதனை

தமிழகத்தின் முதல்வர் பதவியை கைப்பற்ற தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்த சசிகலாவுக்கு கடைசியில் கிடைத்தது ஜெயில் தண்டனைதான்.

பதவியேற்ற பத்து நிமிடத்தில் வன்முறை. ஓபிஎஸ் வீடு மீது கல்வீச்சு

சசிகலா ஆதரவு அணியின் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு கவர்னரின் அழைப்பின் பேரில் கடந்த சில மணி நேரங்களுக்கு முதல்வராக பதவியேற்றார். அவர் பதவியேற்ற சில நிமிடங்களில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும்,

மக்களின் மனதை வெல்வாரா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி?

கடந்த சில நாட்களாக ஆட்சி அமைப்பது யார்? என்ற குழப்பத்திற்கு இன்று விடை கிடைத்துள்ளது.

2016ஆம் ஆண்டின் திரைப்பட புள்ளிவிபர புத்தகம். ஏவிஎம் சரவணன் வெளியிட்டார்

2016 ஆம் ஆண்டிற்கான திரைப்பட புள்ளி விபரங்கள் அடங்கிய புத்தகத்தை திரு: ஏவிஎம் சரவணன் அவர்கள் வெளியிட்டார்.

எடப்பாடி பழனிச்சாமியின் புதிய அமைச்சரவை பட்டியல்:

எடப்பாடி பழனிச்சாமி - உள்துறை, ஆட்சிப்பணி, காவல்துறை, பொது மற்றும் நெடுஞ்சாலைத்துறை