ஆலுமா டோலுமாவை விட 10 மடங்கு பவர் 'தல விடுதலை'

  • IndiaGlitz, [Tuesday,August 01 2017]

பிரபல எடிட்டர் ரூபன் தல அஜித்தின் 'விவேகம்' படத்தின் எடிட்டிங் பணிகளை முழுமையாக முடித்துவிட்ட நிலையில் இந்த படம் குறித்து நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல புதிய தகவல்களை தந்துள்ளார்.

குறிப்பாக அனிருத்தின் பாடல்கள் குறித்து குறிப்பிடும்போது, 'பலர் இந்த படத்தில் ஆலுமா டோலுமா' போன்ற பாடல் இல்லையே என்று ஆதங்கப்பட்டனர். ஆனால் இந்த படம் முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாக்கபப்ட்டுள்ளதால் இந்த படத்தில் ஆலுமா டோலுமா பாடலுக்கான பிளாட்பார்ம் இல்லை. ஆனால் அதே நேரத்தில் ஆலுமா டோலுமா பாடல் தியேட்டரில் எந்த அளவுக்கு வரவேற்பை பெற்றதோ, அதைவிட பத்து மடங்கு வரவேற்பை தல விடுதலை பாடல் பெறும். ஆலுமா டோலுமா பாடலுக்காவது அங்கங்கே எழுந்து தல ரசிகர்கள் கைதட்டினர். ஆனால் இந்த பாடல் முழுக்கவே தியேட்டரில் பயங்கரமாக இருக்கும் என்று கூறினார்.

இந்த பாடல் ஒரு கூலான இடத்தில் பின்னணியில் இருந்தாலும் இந்த பாடலில் இருக்கும் வரிகளும், அதற்கு பொருத்தமான காட்சிகளும் ஸ்க்ரீனில் பார்க்கும்போது பயங்கரமாக இருக்கும். இந்த பாடல் எமோஷனல் மற்றும் கொண்டாட்டமாக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

More News

'விவேகம்' இடி என்றால் 'மெர்சல்' மின்னல்': எடிட்டர் ரூபன்

தல அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' மற்றும் தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்; ஆகிய இரண்டு படங்களிலும் காஜல் அகர்வால் நாயகியாக நடித்து வருவது தெரிந்ததே. ஆனால் இந்த இரண்டு படங்களுக்கும் எடிட்டிங் செய்து வருகிறார் எடிட்டர் ரூபன்...

'விவேகம்' ரிலீஸ் தேதி! இயக்குனர் சிவாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்ட நிலையில் நேற்று இரவு இயக்குனர் சிவா தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'விவேகம்' படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார்...

ஓவியாவின் நேர்மைக்கு மேலும் ஒரு சான்று

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பங்கேற்பாளர்களில் அனைவரையும் கவர்ந்த ஒருவர் என்றால் அது ஓவியா என்பது சந்தேகமற்ற ஒருகூற்று. இதற்கு முதல் முழு காரணம் ஓவியாவின் உண்மை...

'விவேகம்' படத்தை பாராட்டிய விஜய்

தல அஜித்தின் 'விவேகம்' மற்றும் தளபதி விஜய்யின் 'மெர்சல்;' ஆகிய இரண்டு படங்களின் எடிட்டராக பணி செய்து கொண்டிருக்கும் ரூபன் IndiaGlitzஇடம் பகிர்ந்துகொண்ட தகவல் அனைவரையும் ஆச்சரியப்படும் வகையில் உள்ளது.

சிலிண்டர் மானியம் ரத்து: ஒவ்வொரு மாதமும் ரூ.4 விலை அதிகம். மத்திய அரசு அறிவிப்பு

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை ஒட்டுமொத்தமாக ரத்து செய்வதோடு, ஒவ்வொரு மாதம் சிலிண்டரின் விலையை ரூ.4 அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.