குழந்தைகளுக்காக தளபதி விஜய் ஏற்று நடித்த ரோல்: மெர்சலான ரூபன்

  • IndiaGlitz, [Tuesday,August 01 2017]

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் விஜய்யின் ரோல்கள் குறித்து எடிட்டர் ரூபன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடித்துள்ளதை ரூபன் குறிப்பிடவில்லை என்றாலும் மல்டிபிள் ரோலில் விஜய் நடித்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும் விஜய் நடித்துள்ள மேஜிக்மேன் ரோல், அனைத்து தரப்பினர்களுக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என்றும் குறிப்பாக குழந்தைகளை கவரும் வகையில் இந்த ரோல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ரூபன் தெரிவித்தார். குழந்தைகளுக்காக விஜய் ஏற்று நடித்துள்ள இந்த மேஜிக்மேன் ரோல் துறுதுறுவென எனர்ஜியாக இருப்பதால் இந்த ரோல் எனக்கு பெர்சனலாக மிகவும் பிடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த படத்தில் விஜய் நடித்துள்ள ஒவ்வொரு கேரக்டரும் அனைவரும் விரும்பும் வகையில் அமைந்துள்ளதாகவும், இது சமீபத்தில் வெளியான போஸ்டர்களுக்கு கிடைத்த வரவேற்பில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் மேலும் கூறினார்.

More News

மெர்சலின் மெலடி பாடல் பல வருடங்களுக்கு பேசப்படும்: எடிட்டர் ரூபன்

விஜய் முதன்முதலாக மூன்று வேடங்களில் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் குறித்து பல ஆச்சரியமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது...

காஜல் அகர்வாலின் காதல், அக்சராஹாசனின் ஆக்சன் குறித்து ரூபன்

தல அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' படம் ஒரு அதிரடி ஆக்சன் படம் என்றாலும் இந்த படம் ஒரு அழுத்தமான கணவன் - மனைவி காதலையும் கொண்ட படம் என்று எடிட்டர் ரூபன் நமக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நீயெல்லாம் தலைவியா? காயத்ரியை கதிகலங்க வைத்த பிந்துவின் கேள்விகள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பங்கேற்பாளர்களில் குள்ளநரித்தனம் செய்பவர்கள், பொய்யை மட்டுமே முதலீடாக வைத்துள்ளவர்கள், பெண்களுக்கு நிகராக புரணி பேசும் ஆண்கள் என அனைவரும் இருக்கும் நிலையில் அப்பாவி பரணியை கார்னர் செய்து வெளியேற்றியது கொடுமையிலும் கொடுமை என பார்வையாளர்கள் மத்தியில் இன்றும் அனுதாபம் இருந்து வருகி

ஆலுமா டோலுமாவை விட 10 மடங்கு பவர் 'தல விடுதலை'

பிரபல எடிட்டர் ரூபன் தல அஜித்தின் 'விவேகம்' படத்தின் எடிட்டிங் பணிகளை முழுமையாக முடித்துவிட்ட நிலையில் இந்த படம் குறித்து நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல புதிய தகவல்களை தந்துள்ளார்...

'விவேகம்' இடி என்றால் 'மெர்சல்' மின்னல்': எடிட்டர் ரூபன்

தல அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' மற்றும் தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்; ஆகிய இரண்டு படங்களிலும் காஜல் அகர்வால் நாயகியாக நடித்து வருவது தெரிந்ததே. ஆனால் இந்த இரண்டு படங்களுக்கும் எடிட்டிங் செய்து வருகிறார் எடிட்டர் ரூபன்...