'விவேகம்' படத்தை பாராட்டிய விஜய்

  • IndiaGlitz, [Tuesday,August 01 2017]

தல அஜித்தின் 'விவேகம்' மற்றும் தளபதி விஜய்யின் 'மெர்சல்;' ஆகிய இரண்டு படங்களின் எடிட்டராக பணி செய்து கொண்டிருக்கும் ரூபன் IndiaGlitzஇடம் பகிர்ந்துகொண்ட தகவல் அனைவரையும் ஆச்சரியப்படும் வகையில் உள்ளது.
திரையுலகிற்கு வெளியே விஜய் ரசிகர்கள் அஜித் படத்தை கிண்டல் செய்வதும், அஜித் ரசிகர்கள் விஜய் படத்தை கிண்டலும் செய்வதுமாக இருந்தாலும் இருவரும் பெர்சனலாக ஒருவரது படங்களை இன்னொருவர் பாராட்டி வருவதாக ரூபன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக 'விவேகம்' படத்தின் டீசரை பார்த்து விஜய் பாராட்டியதாக நமக்களித்த பிரத்யேக பேட்டியில் கூறிய ரூபன், திரைத் துறை ஆரோக்கியமாக ஈகோ இல்லாமல் சென்று கொண்டிருப்பதை இது உணர்த்துவதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல் விவேகம் படத்தின் பாடலான 'காதலாட' பாடலை கேட்டு இயக்குனர் சிவாவுக்கு போன் செய்து அட்லி பாராட்டியதாக ரூபன் தெரிவித்துள்ளார். இயக்குனர் சிவாவின் படங்களில் ரொமான்ஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் இருக்காது, ஆனால் அட்லியோ ரொமான்ஸ் காட்சிகளுக்கு புகழ் பெற்றவர். இந்த நிலையில் ;'காதலாட' பாடலை கேட்ட அட்லி, சிவாவுக்கு போன் செய்து 'விவேகம்' படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் சிறப்பாக இருக்கும் என்பதை இந்த பாடலில் இருந்தே உணர்கிறேன்' என்று பாராட்டியது ஆச்சரித்துக்குரிய ஒரு விஷயம் என்று அவர் தெரிவித்தார்.

More News

சிலிண்டர் மானியம் ரத்து: ஒவ்வொரு மாதமும் ரூ.4 விலை அதிகம். மத்திய அரசு அறிவிப்பு

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை ஒட்டுமொத்தமாக ரத்து செய்வதோடு, ஒவ்வொரு மாதம் சிலிண்டரின் விலையை ரூ.4 அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

உங்கள் தோளில் சவாரி செய்ய முயலும் அரசியல் கட்சிகள்: கமல்ஹாசனுக்கு குஷ்பு அறிவுரை

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாகவே தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், கமல்ஹாசனுக்கு ஆதரவு கொடுக்கும் போர்வையில் சில அரசியல் கட்சிகள் கமல்ஹாசனை தங்கள் கட்சியில் இழுக்கவும், அல்லது அரசுக்கு எதிராக தூண்டிவிடவும் செய்து வருகிறது.

பிந்துமாதவி எண்ட்ரியின் பின்னணி என்ன? ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவியாவுக்கு அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற்றுள்ள 8 பேரை தவிர கிட்டத்தட்ட மொத்த தமிழ்நாட்டு ரசிகர்களிடம் இருந்தும் நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து கொண்டே இருக்கின்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும் சில பிரபலங்கள்: ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலில் 14 பங்கேற்பாளர்கள் என அறிவிக்கப்பட்டனர்.

தல அஜித்தின் 'விவேகம்' சென்சார் தகவல்கள்

தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' திரைப்படத்தின் சென்சார் காட்சி இன்று நடைபெறவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் உறுதி செய்யப்பட்ட நிலையில் சற்றுமுன் சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்தனர்.