'ராட்சசி' ரிலீஸான மறுநாள் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Saturday,July 06 2019]

ஜோதிகா நடித்த 'ராட்சசி' திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்தில் ஒரு காட்சி உண்டு. அதில் ஜோதிகா தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றவுடன் பள்ளியில் பணிபுரியும் ஒரு பெண், அனைத்து ஆசிரியர்களையும் அறிமுகம் செய்ய அழைத்து வரவா? என்று கேட்பார். அதற்கு ஜோதிகா, பள்ளி நேரத்தில் யாரையும் அழைக்க வேண்டாம், தேவைப்பட்டால் மாலையில் அல்லது இன்னொரு நாள் பார்த்து கொள்ளலாம்' என்று கூறுவார்.

இந்த நிலையில் இன்று பள்ளிக்கல்வித்துறை ஒரு அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளிகளின் நிர்வாக விவரங்கள் குறித்து ஆலோசனை செய்ய ஆசிரியர்களை நேரில் அழைத்து கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும், நிர்வாக காரணங்களுக்காக கூட்டம் நடத்த வேண்டியிருந்தால் மாலை நேரம் அல்லது சனிக்கிழமைகளில் நடத்தலாம் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரங்களில் கல்வி அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், தேவைப்படும் விவரங்களை மின்னஞ்சல் வழியே அனுப்பினால் பள்ளி வேலைநேரம் பாதிக்கப்படாது எனவும் பள்ளிக்கல்வித்துறையின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

'ராட்சசி' திரைப்படம் வெளிவந்த மறுநாளே அந்த படத்தில் வருவது போன்ற ஒரு உத்தரவை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளதை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

More News

பாட்டில்கேப் சேலஞ்சை கையிலெடுத்த முதல் இந்திய நடிகை!

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பாட்டில்கேப் சேலஞ்ச் என்ற சேலஞ்ச் வைரலாகி வருகிறது என்பது தெரிந்ததே.

முன்னணி நடிகைகளின் மாதமாக மாறிய ஜூலை!

ஒவ்வொரு வாரமும் குறைந்தது மூன்று அல்லது நான்கு தமிழ் திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும் ஒருசில படங்கள் மட்டுமே எதிர்பார்ப்புக்குரியதாகவும், ரசிகர்களின் மனதை கவர்ந்த படங்களாகவும்

தமிழர்கள் மறந்தாலும் தருமதேவதை மறக்கவில்லை: வைகோ வழக்கின் தீர்ப்பு குறித்து கஸ்தூரி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளியான நிலையில் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும்

'சூது கவ்வும்' உள்பட மூன்று இரண்டாம் பாக திரைப்படங்கள்: பிரபல தயாரிப்பாளர் தகவல்

கோலிவுட் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக இரண்டாம் பாக திரைப்படங்கள் அதிகம் உருவாகி வருகிறது. ரஜினியின் '2.0', கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2', உள்பட

திருமண வாழ்க்கையில் எனக்கு உடன்பாடு இல்லை: ஓவியா

பிக்பாஸ் என்றாலே அனைவருக்கும் உடனே ஞாபகம் வரும் பெயர் ஓவியா. இந்த நிகழ்ச்சியால் ஓவியா அளவுக்கு இன்னும் யாரும் புகழ் பெறவில்லை