'ஈரம்' அறிவழகனின் அடுத்த படம்.. அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

  • IndiaGlitz, [Wednesday,December 14 2022]

ஆதி நடித்த 'ஈரம்’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் அறிவழகன் இயக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த 2009ஆம் ஆண்டு 'ஈரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானார் இயக்குனர் அறிவழகன். அதன்பின் அவர் ’வல்லினம்’ ’ஆறாது சினம்’ ’குற்றம் 23’ ஆகிய படங்களை இயக்கினார் என்பதும், தற்போது அவர் இயக்கி முடித்துள்ள அருண்விஜய்யின் ’பார்டர்’ என்ற திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் அறிவழகன் இயக்கும் அடுத்த திரைப்படம் ’சப்தம்’ என்ற டைட்டிலுடன் உருவாக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனது முதல் பட நாயகன் ஆதி இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்றும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார் என்றும் அறிவழகன் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

மேலும் 7ஜி பிலிம்ஸ் சிவா மற்றும் ஆல்பா பிரேம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வித்தியாசமாக இருப்பதை அடுத்து இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

More News

அமைச்சர் உதயநிதிக்கு கமல், ரஜினி வாழ்த்து.. விஷாலின் வேண்டுகோள் என்ன தெரியுமா?

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் அவருக்கு உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர்

அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி.. முதல் கையெழுத்து என்ன தெரியுமா?

தமிழக அமைச்சராக முதலமைச்சர் முக ஸ்டாலின் மகனும் சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டவுடன் அவர் கையெழுத்திட்ட முதல் கோப்பு

10 வயது குழந்தைக்கு உரிய பொது அறிவு கூட இல்லையா? வெறுத்துப்போன பிக்பாஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 66வது நாளாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோ குறித்து அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க்

'வாரிசு', 'துணிவு' ஒரே நாளில் ரிலீஸா? அடுத்தடுத்த நாளில் ரிலீஸா?

விஜய் நடித்த 'வாரிசு' மற்றும் அஜித் நடித்த 'துணிவு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் திருநாளில் வெளியாகவிருப்பது உறுதி செய்யப்பட்ட போதிலும் இன்னும் சரியான ரிலீஸ் தேதி இரு

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகருடன் டூயட் பாடும் லைலா.. க்யூட் வீடியோ

 சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' என்ற சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகருடன் நடிகை லைலா டூயட் பாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில்