close
Choose your channels

டிசம்பர் 4 ரேஸில் இணைந்தது ஈட்டி

Monday, November 23, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த தீபாவளி தினத்தில் கமல்ஹாசனின் 'தூங்காவனம்' மற்றும் அஜித்தின் 'வேதாளம்' ஆகிய இரண்டு பெரிய படங்கள் வெளியாகி இரண்டுமே சூப்பர் ஹிட் ஆனது. இதையடுத்து பொங்கல் தினத்தில்தான் அதிக படங்கள் ஒரே நாளில் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், அதற்கு மாறாக வரும் டிசம்பர் 4ஆம் தேதி முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகவுள்ளதாக அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

சூர்யாவின் 'பசங்க 2', வெற்றிமாறனின் 'விசாரணை' மற்றும் சிவகார்த்திகேயனின் 'ரஜினிமுருகன்' ஆகிய படங்கள் டிசம்பர் 4ல் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதர்வாவின் 'ஈட்டி' படமும் இந்த ரேஸில் தற்போது இணைந்துள்ளது.

அதர்வா, ஸ்ரீதிவ்யா ஜெயப்பிரகாஷ், ஆடுகளம் நரேன், அழகம்பெருமாள் உள்பட பலர் நடித்துள்ள 'ஈட்டி' படத்தை ரவி அரசு இயக்கியுள்ளார். மைக்கேல் ராயப்பன் மற்றும் வெற்றிமாறன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையப்பாளராகவும், நட்டி ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.